கரர: இரணட நளகளக நடபறற வநத வரமன வரததறயனரன சதன நறவ!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில், கடந்த மே மாதம் 26 -ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி, தொடர்ந்து எட்டு நாட்கள் நடத்தினர். இந்த நிலையில், மீண்டும் கடந்த இரண்டு நாள்களாக, ஏற்கனவே சோதனை செய்த இடங்கள் மற்றும் சீல் வைத்த இடங்கள் என 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். 5 வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருமான வரித்துறை சோதனை

தொடர்ந்து, இரண்டாவது நாளாக ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழனி முருகன் நகைக்கடையில் மட்டும் தொடர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு நாள்கள் சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட 2 இடங்களில் சீலை அகற்றினர். மேலும், ஒரு சில இடங்களில் ஆவணங்கள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த சோதனை நேற்று தற்காலிகமாக நிறைவடைந்தது. இதற்கிடையில், கரூர் கொங்கு மெஸ் உணவகம் உள்ளிட்ட சில இடங்களில், ஏற்கனவே வைக்கப்பட்ட சீல் இன்னும் அகற்றப்படவில்லை.



from Latest news https://ift.tt/NDw2lgs

Post a Comment

0 Comments