கரநடக பணயல ம.ப-யலம பஜக-வகக எதரக அதரட... கஙகரஸ வயகம ககடககம?!

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவைப்போலவே, மிகப்பெரிய வெற்றியை மத்தியப் பிரதேசத்திலும் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வியூகங்களை காங்கிரஸ் கட்சி வகுத்துவருகிறது. தேர்தலுக்கு ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், நர்மதா ஆற்றில் பூஜை நடத்தி, தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி.

ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப் பிரதேச பா.ஜ.க-வுக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆட்சிமீதான கோபமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று காங்கிரஸ் கணக்குப்போடுகிறது. மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில், 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது.

வியாபம் முறைகேடு (Vyapam scam) உள்ளிட்ட விவகாரங்களால், பா.ஜ.க கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அந்தச் சூழலில், அந்த மாநிலத்தில் 2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. முதல்வர் பதவி தமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காங்கிரஸின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியா. ஆனால், காங்கிரஸின் மூத்த தலைவரான கமல்நாத்துக்குத்தான் முதல்வராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிவராஜ் சிங் செளஹான்

அதனால், ஜோதிராதித்யா சிந்தியா கடும் அதிருப்தியில் இருந்தார். அதாவது, ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னணி தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே நடைபெறும் மோதலைப்போலவே, அன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் இடையே மோதல் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த அந்த மோதல் பகிரங்கமாக வெடித்து, காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டது.

ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு 22 ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். அவர்களுடன் பா.ஜ.க-வில் இணைந்தார் சிந்தியா. அதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. பா.ஜ.க-வைச் சேர்ந்த சிவராஜ் சிங் செளஹான் நான்காவது முறையாக முதல்வரானார். பா.ஜ.க-வுக்குத் தாவிவந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் மலர்ந்த பா.ஜ.க ஆட்சிமீது வேலையின்மை, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

கமல்நாத் - திக்விஜய் சிங்

மேலும், பா.ஜ.க-வுக்கு உள்ளேயும் கடும் அதிருப்திகளும் மோதல் போக்குகளும் நிலவுகின்றன. குறிப்பாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.டி.ஷர்மாவுக்கும், முதல்வர் சிவராஜ் சிங் செளஹானுக்கும் இடையே மோதல் தீவிரடைந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலரும் செளஹான் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உட்கட்சிப்பூசல் என்கிற போக்கு மாவட்ட அளவிலும் நிலவுவதால், காங்கிரஸ் கட்சிக்குப் பலர் தாவுகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ஏராளமான வாக்குறுதிகளை வாரிவழங்கியிருக்கிறது. 100 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் ரூ.1,500, விவசாயக் கடன் தள்ளுபடி, ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்று மக்களைக் கவரக்கூடிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், காங்கிரஸுக்குள் உட்கட்சிப்பூசல் அதிகரித்திருக்கிறது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் கமல்நாத் முதல்வராவார் என்று கமல்நாத் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்கிறார்கள். அது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ராகுல் காந்தியே தலையிட்டு கோஷ்டிகளை அமைதிப்படுத்தியிருக்கிறார்.

ராகுல் காந்தி

பா.ஜ.க-விலிருந்து முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகனும், முன்னாள் அமைச்சருமான தீபக் ஜோஷி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். பாரத் ஜோடோ யாத்திரையின்போது பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில்தான் நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். இதனால், பழங்குடி மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும், தேர்தல் வெற்றிக்கு அது உதவும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.



from Latest news https://ift.tt/u8ZK1hQ

Post a Comment

0 Comments