தலமச சயலர டஜப தகவல அதகர கமஷனர... யரம தமழர இலல - வமரசனமம வளககமம!

தமிழ்நாட்டில், சமீபத்தில் உயர் பதவிகளான தலைமைச் செயலாளர், சட்ட ஒழுங்கு டிஜிபி, சென்னை மாநகர கமிஷனர், தலைமை தகவல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நியமனம் நடந்தது. இதில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவரும் வேறு மொழி பேசக்கூடிய வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பாக, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிற சிவ்தாஸ் மீனா ராஜஸ்தானைச் சேர்ந்தவர். தமிழக டிஜிபியாக பதவி ஏற்றிருக்கும் சங்கர் ஜிவால் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழக தகவல் கமிஷனராக பொறுப்பேற்று இருக்கும் ஷகீல் அக்தர் பீகாரைச் சேர்ந்தவர். அதேபோல், மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியைச் சேர்ந்தவர். இப்படியாக, முக்கியமான பதவிகளில் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இதற்கு முன்பு இந்தப் பதவிகளில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே...

தொடர்ந்து உயர்பதவிகள் மற்ற மாநிலத்தவருக்கு, நெருங்கிய காலகட்டத்தில் சென்றிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளில் நியமிக்கும்போது பணிகளைச் சரியாக செய்யவில்லையா? திறமையானவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானா? போன்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

சிவ்தாஸ் மீனா
சங்கர் ஜீவால்
ஷக்கீல் அக்தர்
சந்தீப்ராய் ரத்தோர்

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த வேல்முருகன், ``ஒரே நேரத்தில் முக்கிய அதிகாரமிக்க பதவிகளை மற்ற மாநில அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய தேவை என்ன?... தமிழகத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கு அந்த வாய்ப்பு இருந்தும்  மறுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நேர்மையான அதிகாரி தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலராகும் தகுதி இருந்தபோதும் தமிழக அரசு அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.

அதேபோல், தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தலைமை தகவல் கமிஷனராக பதவி ஏற்று இருக்கும் ஷக்கீல் அக்தர்  ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி. அவரைப் போல, பல ஐபிஎஸ் அதிகாரிகள், தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஏன் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை?. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திலே பணியாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு மாபெரும் கனவு. அதற்கு தமிழக அரசு சிறிதளவேனும் மதிப்பு கொடுத்து இருக்கலாம்.

மாநில சுயாட்சி

மற்ற மாநிலங்களில் சில முக்கிய பதவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒரே நேரத்தில் முக்கிய மூன்று பதவிகள் வேறு மாநிலத்தில் மாற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே, மாநில - மத்திய அரசு இடையே அதிகாரப்போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது, ஆளுநரும் அதில் இணைந்திருக்கிறார். இந்தச் சூழலில் அதிகார பிரச்னை ஏற்படும்போது, மத்திய அரசால் உயர் பதவிகளில் இருக்கும் மாற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மிக எளிதாக தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்ள முடியும். சொல்லப் போனால், அவர்களின் குடுமியே மத்திய அரசு கைகளில் தான் இருக்கிறது. அப்போது, தமிழக முதலமைச்சர் சொல் கேட்பார்களா? இல்லை, மத்திய அரசு சொல்வதை கேட்பார்களா?

வேல்முருகன்

இது தமிழகத்தைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளை அவமானப்படுத்தியதாகவே நான் பார்க்கிறேன். சிவ்தாஸ் மீனா மத்திய ஆட்சி பணியில் பணியாற்றியதை குறிப்பிட்டு அவர் மத்திய அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவார் எனும் அடிப்படையில் தலைமைச் செயலாளர் பதவி அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், மற்ற அதிகாரிகளும் தானே மத்திய பணிகளில் செயல்பட்டு இருக்கிறார்கள். அதிலும் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கின்றனர். திமுக அரசு ’மாநில சுயாட்சி’  பேசும் கட்சி. இந்த நிலையில் தமிழகத்தைச் சாராதவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி இருக்கிறது. அதில் இன்னும் ஒரு படி மேலாக அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் பதவிகளை வழங்க வேண்டும்.  அதிலும் சமூக நீதியை திமுக அரசு நிலை நாட்ட வேண்டும் என்பதே கூட்டணி கட்சியாக என் கோரிக்கை” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக மாணவர் அணி தலைவர் இராஜீவ் காந்தி, ``மற்ற மாநிலத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுவதை விமர்சிப்பது சரியான பார்வை அல்ல. காரணம், அவர்கள் கடந்த 20, 30 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்கள். குறிப்பாக, தமிழகத்தில் பணியாற்றி தமிழ் மொழியைக் கற்று தேர்ந்து, இங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்தவர்களாகள். அந்த வகையில் அவர்கள் உயர் பதவியில் நியமிப்பதை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை.

இராஜீவ் காந்தி

அமைச்சர்களைத் தாண்டி அதிகாரிகளாகவே அனைத்து அறிவிப்புகளையும் செய்துவிட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும், அமைச்சரவையும் தான் முக்கியம் முடிவுகளை எடுக்கும். ஆகவே, உயர் அதிகாரிகள் மாநில பணிகளில் சுணக்கம் ஏற்படுத்துவார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால், தமிழர்களுக்கோ தமிழர்களின் நலன் சார்ந்து எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியைப் போல நேரடியாக தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. கடந்த காலங்கள் தமிழகத்தில் பணியாற்றிய அனைத்து அனுபவங்களும் இவர்களுக்கு இருக்கிறது என்னும் அடிப்படையில் இவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதை விமர்சிக்க வேண்டியதில்லை” என்றார்.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசியதாவது, “எல்லா உயர் அதிகாரிகளும் பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து தான் செயல்படமுடியும். அவர்களின் மீது மறைமுகமாக மத்திய அரசு அதிகாரிகள் மீது அதிகாரத்தை செலுத்தும். எனவே, மத்திய அரசுடன் இணைந்து செய்லபடும் கட்டாயம் அதிகாரிகளுக்கு இருக்கும். காரணம் எதாவது நேர்ந்தால், ஓய்வு பெறும்போது சிக்கல் எழும் என்னும் அச்சம் அதிகாரிகளுக்கு இருக்கிறது. அதனால், எந்த மோதல் போக்கையும் அவர்கள் கையாள மாட்டார்கள்.

ப்ரியன்

அதேவேளையில், மாநில அரசின் நன்மதிப்பைப் பெற்றிருந்தால் இந்தப் பதவிக்கு அவர்ளால் வரமுடியும். குறிப்பாக, முதலமைச்சரின் மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆகவே, இந்த தமிழர்களுக்கான உயர் பதவி என்பது விமர்சனத்துக்கு ஒத்துவருமே தவிர, எதார்த்தத்திற்கு சரிப்பட்டு வராது. குறிப்பாக, திமுக கட்சியை விமர்சித்தவர்களுக்கு இந்த தமிழர்கள் அல்லாத உயர்பதவி நியமனம் கன்டென்டாக மாறியிருக்கிறது ” என்றார்.



from Latest news https://ift.tt/hIclbiO

Post a Comment

0 Comments