பழைய மணல் குவாரியில் தேங்கிய தண்ணீர் - நண்பர்களுடன் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் கடந்த 2021 ம் ஆண்டு தனியார் இடத்தை விலைக்கு வாங்கி குவாரி அமைத்து அதிலிருந்து மணல் எடுத்து நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு பயன்படுத்தி உள்ளனர். மண் எடுத்து முடித்த பிறகு அந்தப் பகுதிக்குள் வெளிநபர்கள் செல்லாதபடி கம்பி வேலி அமைத்து உள்ளனர்.

கௌதம்

தற்போது மண் எடுக்கப்பட்ட பகுதியில் மழை நீர், தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இந்நிலையில் ஏராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிரிவாசன் மகன் கௌதம்(13). சீர்காழியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்த இவர், நண்பர்களுடன் கம்பி வேலியை தாண்டி பழைய மணல் குவாரியில் குளம் போல் தேங்கி உள்ள தண்ணீரில் குளித்துள்ளார்.

அப்போது ஆழம் அதிகமாக இருந்ததால் கௌதம் தண்ணீரில் மூழ்கி உள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தபோது கௌதம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

தகவல் அறிந்த பூம்புகார் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கௌதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



from Latest news https://ift.tt/Qzpy1vi

Post a Comment

0 Comments