அமெரிக்க உணவகத்தில் `மோடி ஜி தாலி'| வெடிக்கத் தொடங்கிய `மயோன் எரிமலை' - உலகச் செய்திகள்

தள்ளுபடி விலையில் பெறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல், ரஷ்யாவிலிருந்து பாகிஸ்தான் வந்தடைந்தது. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு இது நிவாரணமளிக்கும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடித்து திரும்பிக்கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஸ்காட்லாந்தில் ஆளும் கட்சியின் நிதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நாட்டின் முன்னாள் தலைவர் நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon) கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் ராக்வெல் டோலோரஸ் அன்டியோலா (Racquelle Dolores Anteola), மற்றும் மெலிசா டுஃபோர் (Melissa Dufour) என்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயென்சர்கள், தாங்கள் ரகசியப் பெட்டிகளில் மறைத்துவைத்திருந்த மூன்று மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருளுடன் கைதாகியிருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு அமெரிக்காவின், நியூஜெர்சியிலுள்ள உணவகம் ஒன்று "மோடிஜி தாலி" என்ற சிறப்பு உணவை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் வலையில் சிக்கிக்கொண்ட ஹம்பேக் திமிங்கிலம், ஆபத்தான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு கடலில் மீண்டும் விடப்பட்டது.

ஜெர்மனியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான ஆண்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை `ஏற்றுக்கொள்ளக்கூடியதாக' கருதுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

வடமேற்கு பாகிஸ்தானில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக எட்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸின், மயோன் எரிமலை வெடிக்கத் தொடங்கியிருப்பதால், அதன் அருகே வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

எகிப்தின் செங்கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்ததில், `மூன்று பிரிட்டிஷ் பயணிகளைக் காணவில்லை' என்று பிபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.



from Latest news https://ift.tt/4sOn5eJ

Post a Comment

0 Comments