ட்விட்டரின் முன்னாள் சி.இ.ஓ-வாக இருந்த ஜாக் டோர்சி சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், "நான் ட்விட்டர் சி.இ.ஓ-வாக பொறுப்பு வகித்திருந்த சமயத்தில் பல வெளிநாட்டு அரசுகள் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்திருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் கோரிக்கைகளும், அழுத்தங்களும் வந்தன.
ஒருகட்டத்தில், `இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம். உங்கள் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவோம். நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால், உங்கள் அலுவலகங்களை மூடுவோம்' என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். இதுதான் இந்தியாவா! இதுதான் ஜனநாயகமா!" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் மோடியைச் சந்தித்த ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ``நான் பிரதமர் மோடியின் ரசிகன்" எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ட்விட்டரின் முன்னாள் சி.இ.ஓ முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், ``ட்விட்டருக்கு வேறு வழியில்லை, ஆனால், உள்ளூர் அரசின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
நாம் அமெரிக்காவின் சட்டங்களை உலகம் முழுவதும் பயன்படுத்த முடியாது. வெவ்வேறு வகையான அரசுகளுக்கு வெவ்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே அந்தந்தச் சட்டத்தின் கீழ் சாத்தியமான சுதந்திரமான பேச்சுகளை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest news https://ift.tt/F2qYagB
0 Comments