Doctor Vikatan: நளளரவல சறநர கழககம உநததல; தககம தடரவதல பரசன... தரவ உணட?

Doctor Vikatan: என் வயது 64. சிறுநீர் கழிக்க நடு இரவில் எழுந்தால், பின் உறக்கம் வருவதேயில்லை. நீரிழிவு பிரச்னை இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் நீர் அருந்துவது இல்லை. இருப்பினும் தூக்கத்தினிடையில் எழவேண்டிய நிலை தொடர்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

- Anubavi Raj, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

மருத்துவர் சஃபி

இரவு எட்டு மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதில்லை என்கிறீர்கள். ஆனாலும் நள்ளிரவில் தூக்கம் கெட்டு விழித்தெழ உங்களுடைய ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததுதான் காரணமாக இருக்கும்.

கடைசியாக நீங்கள் எப்போது சர்க்கரைநோய்க்கான பரிசோதனை செய்தீர்கள் என்று பாருங்கள். தற்போது ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது, மூன்று மாதங்களின் சராசரியான ஹெச்பிஏ1சி சோதனையில் ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் பார்க்கப்பட வேண்டும்.

நீங்கள் நீரிழிவுக்கு சிகிச்சைகள் எடுக்கிறீர்களா, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துவருகிறீர்களா என்று பாருங்கள். உங்களுடைய தற்போதைய ரத்தச் சர்க்கரை அளவைப் பொறுத்து நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவில் மாற்றங்கள் தேவையா என்பதையும் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

சிறுநீர் கழிக்க எழுந்த பிறகு, மீண்டும் தூக்கத்தைத் தொடர்வது சிக்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உளவியல் ரீதியான பிரச்னையாகவும் இருக்கக்கூடும். வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நீரிழிவு நோய்

முதலில் மருத்துவரை அணுகி நீரிழிவுப் பரிசோதனைகளைச் செய்து சிகிச்சையை முறைப்படுத்துங்கள். அடுத்து நீங்கள் தூங்கும் நேரத்தை கவனித்து முறைப்படுத்துங்கள். மிகவும் தாமதமாகத் தூங்கச் சென்றாலும் இந்தப் பிரச்னை வரலாம். சீக்கிரமே தூங்கும் வழக்கத்துக்கு மாறுங்கள். ஒருவேளை இவற்றை எல்லாம் செய்த பிறகும் தூக்கம் முறைப்படவில்லை என்றால் மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுதான் தீர்வு.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/xoKSbTs

Post a Comment

0 Comments