இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு, கடந்த மே மாதம் 7-ம் தேதி, நாடு முழுவதிலும் நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்தத் தேர்வினை, மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர். இந்த நிலையில், நேற்று இரவு (13.06.2023) அதன் முடிவுகள் வெளியாகின.
தமிழ்நாட்டிலிருந்து 1,44,516 பேர் இந்த நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில், 78,693 பேர் அதில் தகுதி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்ற இருவர் 720-க்கு 720 மதிப்பெண்களையும் பெற்று, 99.99 சதவீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கின்றனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/1b8104aa-49dc-4d4b-a871-1944022741c5/IMG_20230614_072417.jpg)
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் - மாலா தம்பதி. இவர்களது மகன், மாணவர் பிரபஞ்சன். ஜெகதீஷ், மேல் ஒலக்கூர் அரசு பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாலா, நெகனூர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 10-ம் வகுப்பு வரை செஞ்சியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற பிரபஞ்சன், மேல்நிலைப் படிப்பை சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயின்றிருக்கிறார்.
மருத்துவப் படிப்பின்மீது ஆர்வம் கொண்ட அவர், நீட் தேர்வை எழுதியிருந்தார். தற்போது அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.
பிரபஞ்சன் உட்பட நீட் தேர்வில் தகுதி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
from Latest news https://ift.tt/UL6wPZk
0 Comments