Tamil News Live Today: டெல்டாவில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

டெல்டாவில் முதல்வர் ஆய்வு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சி வந்தார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூர்வாரும் பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டார்.

முதல்வரின் இந்த ஆய்வு பணியில் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.

`ஆளுநர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது’ - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ``ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல பேசி வருகிறார். அவராக பேசுகிறாரா அல்லது அவரை யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. அவர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் ஆளுநரை ஆளும்கட்சி விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும்கட்சி - ஆளுநர் மோதல் காரணமாக தமிழக மக்கள் நல திட்டங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்’ என்றார். ஆளுநர் கருத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பெரிதாக கருத்து சொல்லாமல் இருந்து வந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய முறையில் பதில் அளித்திருக்கிறார்,

சென்னை: தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய ரயில் சக்கரங்கள்!

ரயில்வே ஊழியர்கள்

சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில் பணிமனை ஒன்று உள்ளது. அதன் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு ரயில் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Latest news https://ift.tt/3UVS7hH

Post a Comment

0 Comments