உ.பி: வீடியோ கேம் மூலம் மதமாற்றம்?! - ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவு... தேடுதல் வேட்டையில் போலீஸ்

.உத்தரப்பிரதேசத்தில் வீடியோ கேம் மூலம் பதின் பருவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட மதமாற்ற மோசடி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது. 'ஃபோர்ட்நைட்' என்ற ஆன்லைன் கேமிங் செயலி மூலம் பதின் பருவ சிறுவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக ஒருவர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில், தலைமறைவாக இருக்கும் மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த இரண்டாவது குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குற்றவாளி கைது

இந்த விவகாரத்தில் காசியாபாத்திலிருந்து இரண்டு பேர், ஃபரிதாபாத்தில் ஒருவர், சண்டிகரில் ஒருவர் என இதுவரை 4 சிறுவர்கள் மத மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்கிறார்கள் போலீஸார். இது குறித்த போலீஸ் விசாரணையில், காசியாபாத்தில் மதம் மாறிய இந்து சிறுவன் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் சேனலான `தி யூத் கிளப்'-பை பார்த்து வந்திருப்பதும், அதில் இஸ்லாம் பற்றிய ஆத்திரமூட்டும் வகையிலான வீடியோக்கள் இருத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆன்லைன் கேமிங் செயலியின் டிஸ்கார்ட் சாட்டிங் தளத்தில் குறிவைக்கப்பட்ட சிறுவர்களுடன் தொடர்பிலிருந்ததாகவும், அதில் ஜாகிர் நாயக், தாரிக் ஜமீல் உள்ளிட்ட போதகர்களின் வீடியோக்கள் காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய காசியாபாத் (நகரம்) துணை போலீஸ் கமிஷனர் நிபுன் அகர்வால், ``காசியாபாத் செக்டார் 23-ல் உள்ள ஜமா மஸ்ஜித்தில் மதகுரு அப்துல் ரஹ்மான் என்பவரைக் கைது செய்து விசாரித்தபோது இதுபற்றி எங்களுக்குத் தெரியவந்தது. பதின் பருவத்தினர் விளையாட்டில் தோல்வியடையும் போது, வெற்றிபெற விரும்பினால் குரானின் வசனங்களைப் படிக்கும்படி கேட்கப்படுகின்றன.

போலீஸ்

அதன் பிறகு அவர்கள் வெற்றி பெற்றால், அவர்களின் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். பின்னர், அவர்கள் இஸ்லாமிற்கு மாறுவார்கள். இதில் காசியாப்பத்தில் மதம் மாறிய சிறுவன், இஸ்லாம் குறித்த கடுமையான பிரசங்கங்களை வழங்கும் தாரிக் ஜமீலின் வீடியோக்களைப் பார்த்து, அதன் பிறகு மதம் மாறினார். மேலும், இத்தகைய செயல்பாட்டின் மூளையாகக் கருதப்படும் ஷாநவாஸ் கான் என்பவரைக் கைது செய்ய ஒரு போலீஸ் குழு மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். ஆன்லைன் கேமிங் செயலிகளால் பதின் பருவத்தினர் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். குற்றவாளிகள் அதை சாதகமாகப் பயன்படுத்தி இளம் வயதினரைக் குறிவைக்கின்றனர்" என்றார்.



from Latest news https://ift.tt/MH0nFdq

Post a Comment

0 Comments