மோடி திட்டத்தில் மோசடி... ரூ.720 கோடியை `ஸ்வாகா' செய்த `போலி விவசாயிகள்'!

'கிருஷி சம்மான்' திட்டத்தில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டிருக்கிறது. இத்திட்டத்தில் நிலம் இல்லாத விவசாயிகள் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் நிதியுதவி பெறும் விவசாயிகளிடமிருந்து அவர்கள் வாங்கிய பணத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயம்

மத்திய அரசு கொடுப்பது போல் மகாராஷ்டிரா அரசும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாயிகளிடம் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி சொன்னபோது மகாராஷ்டிரா அரசுக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா வேளாண்மைத்துறை அமைச்சர் தனஞ்சே முண்டே சட்டமன்றத்தில் பேசுகையில், ''ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிலமே இல்லை. அவர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். அதோடு இத்திட்டத்தில் பயன்பெற அதிகமானோர் தங்களது வருமானத்தை குறைத்தும் கூறியுள்ளனர். இப்படி 12.71 லட்சம் பேர் மத்திய அரசிடமிருந்து ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வாங்குவது, அடையாளம் காணப்பட்டு ரூ.100 கோடி வரை திரும்ப பெறப்பட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்துவது போன்று மகாராஷ்டிரா அரசும் நமோ சேத்கரி மகாசன்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது இத்தகவல்கள் தெரிய வந்தது.

விவசாயம்

புதிய திட்டத்தை செயல்படுத்தும் போது சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அதனை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மோசடி செய்யப்படுவதை தடுக்க ஆவணங்களை பெறும் விவகாரத்தில் கடுமையான கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரை மாநில அரசின் திட்டத்திற்கு 87 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.'' என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. விவசாயிகள் `நமோ சேத்கரி மகாசன்மான் யோஜனா திட்டத்தில்' சேர இணையத்தளத்தில் சென்று தகவல்களை புதுப்பிக்க வேண்டும். வங்கி விபரங்களையும் புதுப்பிக்கவேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது.



from Latest news https://ift.tt/ZG4X5sl

Post a Comment

0 Comments