தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள சாலைப்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் புகையிலை மற்றும் கஞ்சா ஒழிப்பு தனிப்படை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னை பதிவு எண் கொண்ட மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கன்டெய்னரின் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியிருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், கன்டெய்னர் லாரியை திறந்து பார்த்ததில் அதில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பேக்கேஜ்களாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் அழைத்துச் சென்ற போலீஸார், கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடத்தி வரப்பட்ட கஞ்சா பேக்கேஜ்களை தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து தூத்துக்குடி, ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மத போதகரான ஜான் அற்புத பாரத் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியைச் சேர்ந்த சக்தி பாபு, ஓட்டுநரான தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரையும் கைதுசெய்தனர். அதோடு மினி கன்டெய்னர் லாரியில் 300 பாக்கெட்டுகளில் தலா 2 கிலோ வீதம் 600 கிலோ கஞ்சா மற்றும் மினி கன்டெய்னர் லாரியையும் தனிப்படை பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மதுவிலக்கு டி.எஸ்.பி சிவசுப்பு மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி வரை இருக்கும் என மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர். கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில் 300 பேக்கேஜ்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/5pt913W
0 Comments