`5 லட்சம் சதுர அடியில் பந்தல்; 35 ஏக்கரில் உணவுக்கூடம்!' - மாநாடு குறித்து ஆர்.பி.உதயகுமார் அப்டேட்

"உலக அதிசயம் ஏழாக இருந்தாலும், எடப்பாடியார் உரையாற்றப்போகும் இந்த மாநாடு எட்டாவது அதிசயமாகத் திகழும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

உசிலம்பட்டி நிகழ்ச்சியில்

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க மாநாட்டுக்குப் பொதுமக்களைப் பங்கேற்கச் செய்யவைக்கும் வகையில், உசிலம்பட்டியில் நடந்த நிகழ்சியில் மரக்கன்றுகளை வழங்கி, மாநாட்டு 'லோகோ'வை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பேசியவர், ``கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் 65 ஏக்கர் இடத்தில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் உணவுக்கூடங்கள் மட்டும் 35 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகின்றன. பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்படும்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டிருக்கிறது. தொண்டர்கள் வெயிலில் வாடக் கூடாது என்று எடப்பாடியார் உத்தரவிட்டதால், மாநாட்டுப் பந்தலின் வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் கூடுதலாகப் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் ஐந்து லட்சம் சதுரடியில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மாநாட்டுக்காக இவ்வளவு பெரிய பந்தல் யாரும் அமைத்ததில்லை. 

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சேலம், நாமக்கல் கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாக வருகின்றன.

பந்தல் அமைக்கும் பணி

சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங் ரோடு வழியாகவும் வருகின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கு 13 இடங்களில் 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உலக அதிசயம் ஏழாக இருந்தாலும், எடப்பாடியார் உரையாற்றப்போகும் இந்த மாநாடு எட்டாவது உலக அதிசயமாகத் திகழும். இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் எடப்பாடியாரின் வழிகாட்டுதலில் நடைபெற்றுவருகின்றன" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவிப் பிரமாணம் எடுத்த நாள் முதல், விலைவாசி விண்ணை முட்டுகிறது. அனைத்துக் கட்டணங்களும், விலைவாசியும் உயர்ந்துவிட்டன.

நாடாளுமன்றத்தில் கச்சத்தீவைத் தாரைவார்த்தது தி.மு.க-தான் என்று தி.மு.க-வின் துரோகத்தை பிரதமர் அம்பலப்படுத்திவிட்டார். மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசியபோது, 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் புரட்சித்தலைவியின் சேலையை இழுத்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவுகூர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார்.

உசிலம்பட்டி நிகழ்ச்சியில்

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். அதைக் கண்டு அனைவரும் சிரியாய் சிரித்தனர். தி.மு.க, பெண்கள்மீது பாசம் உள்ளதுபோல நாடகம் போடுகிறது.

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும்வகையில், ஆட்சி மாற்றத்துக்கு இந்த மாநாடு வழிவகுக்கும்" என்றார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Latest news https://ift.tt/HyaYP2s

Post a Comment

0 Comments