அப்போலோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்கோமா புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி!

புற்றுநோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடும், உத்வேகத்தோடும் 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' சைக்கிளத்தான் நிகழ்வின் இரண்டாவது பதிப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கு அப்போலோ கேன்சர் சென்டர் (APCC) மற்றும் அப்போலோ ஷைன் ஆகியவற்றோடு அப்போலோ புரோட்டான்  கேன்சர் சென்டர் (APCC) கை கோர்த்தது பெருமளவில் குழந்தைகளையும், சிறார்களையும் பாதிக்கின்ற ஒரு புற்றுநோய் வகையான சர்கோமா (சதைப்புற்று), குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை பரவச் செய்யவேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த வித்தியாசமான நிகழ்வு நடத்தப்பட்டது.

அப்போலோ கேன்சர் சென்டர்

ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் நேர்மறை மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற திடமான உறுதியோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போரிடும் தைரியசாலிகள் வெளிப்படுத்திய ஆர்வமும், உற்சாகமும் உண்மையிலேயே பிரமிக்கச் செய்வதாக இருந்தது. சர்கோமா எனப்படுவது ஒரு அரிதான மற்றும் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற ஒருவகை புற்றுநோயாகும். இது நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளச் செய்கிறது.

புற்றுநோயை வெல்வதற்கு சிகிச்சையின் மூலம் போராடி வருகின்ற நோயாளிகளுக்கு ஆதரவளிப்பது மீது அப்போலோ குழுமம் உறுதிபூண்டிருப்பதால், அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலா ஷைன் ஆகியவற்றோடு சேர்ந்து, அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சைக்கிள் பயணம் என்ற வித்தியாசமான முன்னெடுப்பை மேற்கொண்டது. சர்கோமா பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பது மற்றும் இந்நோயின் கடும் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவது என்ற நோக்கத்தோடு சர்கோமா என்ற சதைப்புற்று குறித்து சரியான தகவல்களை வழங்கும் 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' சைக்கிளத்தான் நிகழ்வு  நடத்தப்பட்டிருக்கிறது. 

அப்போலோ கேன்சர் சென்டர்

2022-ம் ஆண்டில் முதன் முறையாக நடத்தப்பட்ட ‘வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்', மக்களின் சிறப்பான ஆதரவைப் பெற்ற வெற்றி நிகழ்வாக இருந்தது. மனஉறுதியும் தைரியமும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்ற நபர்களோடு சேர்ந்து கொண்டு இந்த முன்னெடுப்பை ஆதரிப்பதற்காக 100 க்கும் அதிகமான சைக்கிள் வீரர்கள் வெகு ஆர்வத்தோடு முன்வந்தனர். இந்த ஆண்டு 5 கி.மீ தூரத்திற்கான சைக்கிளத்தான் நிகழ்வு APCC) வளாகத்திலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

உரிய நேரத்திற்குள் நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சையின் மூலம், புற்றுநோயை வெல்ல முடியும். என்ற ஆற்றல் மிக்க செய்தியைப்  பரப்புவதே இந்நிகழ்வின் கூர்நோக்கமாக இருந்தது. இந்த புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நபர்களின் தணியாத நம்பிக்கை மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு ஜெயிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில், சர்கோமாவை வென்ற முன்னாள் நோயாளிகள் இந்நிகழ்வில் முன்னிலை வகித்து சைக்கிள் வீரர்களை வழிநடத்தினர்.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் & தொழில்முனைவோரான திருமதி கிருத்திகா உதயநிதி, அப்போலோ குழுமத்தின் இந்த சீரிய முயற்சிகள் மீது தனது மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து, சைக்கிளத்தான் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புற்றுநோயை எங்களது வாழ்க்கையில் அப்போலோ உருவாக்கி வரும் நேர்மறை தாக்கத்தை நேரில் காண்பது மனதிற்கு நிறைவளிக்கிறது. இந்த உன்னதமான செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக மனநிறைவும், தாழ்ச்சியும் கலந்த உணர்வோடு நான் பங்கேற்கிறேன். புற்றுநோய்க்கு எதிரான போரில், புற்றுநோயாளிகளோடு பிற அனைவருமே ஒருங்கிணைந்து செயல்பட ‘வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' போன்ற நிகழ்வுகள் உத்வேகம் அளிக்கின்றன " என்று அவர் கூறினார்.

கிருத்திகா உதயநிதி

தசைக்கூட்டு புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர் டாக்டர். விஷ்ணு ராமானுஜன் கூறியதாவது, "சர்கோமா என்பது, ஒரு சிக்கலான ஆனால், மிக அதிகமாக காணப்படாத ஒருவகை புற்றுநோயாகும். பெரும்பாலும் இது குழந்தைகளிடமும், சிறார்களிடம் கண்டறியப்படுகிறது. எனவே, இப்பாதிப்பு நிலை பற்றிய விழிப்புணர்வையும், புரிதலையும் மேம்படுத்துவது நமக்கெல்லாம் இன்றியமையாத பணியாக இருக்கிறது. 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' சைக்கிளத்தான் வழியாக, சர்கோமா (சதைப்புற்று) என்பதை பற்றி சுற்றி நிலவும் மௌனத்தை தகர்ப்பதும் மற்றும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்திய அவர்களது உத்வேகமளிக்கும் வாழ்க்கை கதைகளை பகிர்ந்துகொள்ள இந்நோயிலிருந்து மீண்டு, உயிர்வாழும் நபர்களுக்கு ஒரு மேடையை வழங்குவதும் எமது நோக்கமாகும்" என்றார்.

இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இந்நிகழ்வின்போது பேசுகையில், "அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரிலும் மற்றும் அப்போலோ கேன்சர் சென்டரிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களது பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சர்கோமா பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் இந்நோய் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவும் ஒரு நல்ல தளத்தை 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' சைக்கிளத்தான் நிகழ்வு வழங்குகிறது" என்று கூறினார்.

Apollo Hospitals

இந்த ஆண்டு நடைபெற்ற 'வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்' சைக்கிளத்தான் 2023, 300-க்கும் கூடுதலான சைக்கிள் வீரர்களின் உற்சாகமான பங்கேற்பினால் நேர்த்தியான சாதனை நிகழ்வாக அமைந்தது. சர்கோமாவை சிகிச்சையின் மூலம் வென்று சாதித்தவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்கள் என பலதரப்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய்க்கு எதிரான யுத்தம் என்ற குறிக்கோளின் மீது அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் புற்றுநோயை தைரியத்துடன் எதிர்த்துப் போராடும் நோயாளிகள் இணைந்து வெளிப்படுத்திய ஒற்றுமை மெய்சிலிர்க்கச் செய்கிறது. ஒற்றுமை உணர்வோடு இந்நிகழ்விற்காக ஒருங்கிணைந்திருப்பது புற்றுநோய் வெல்லக்கூடியதே என்ற நம்பிக்கையையும் மற்றும் சர்கோமா பாதிப்பையும் கடந்து ஒளிமயமான எதிர்காலம் இந்நோயாளிகளுக்கு இருக்கிறது. என்ற உணர்வையும் வலுப்படுத்தியிருக்கிறது.

அப்போலோ புரோட்டான் சென்டர் குறித்து

அப்போலோ புரோட்டான் சென்டர் என்பது மிக நவீன புற்றுநோய் சிகிச்சை மையமாகும். இது, தெற்காசியா மற்றும் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெரபி சென்டர் என்ற பெருமைக்குரியது. JCI அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது.

அப்போலோ புரோட்டான் சென்டர்

புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான APCC ன் அணுகுமுறையின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் வலுவான பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல்தளம் மற்றும் ஒரு புற்றுநோய் மேலாண்மை குழுவாக (CMT) உருவாக ஒன்றிணையும் அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள் ஒவ்வொரு CMT - ம், அவர்களது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் முதல் மற்றும் ஒரே அமைவிடத்திற்குரிய ரோபோட்டிக் புற்றுநோயியல் செயல்திட்டம் என்ற இதன் சமீபத்திய அறிமுகம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் திறனை இன்னும் சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறது.



from Latest news https://ift.tt/59UgDCc

Post a Comment

0 Comments