விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் இயங்கி வருகிறது சார்பதிவாளர் அலுவலகம். இங்கு, நடைபெறும் பத்திரப்பதிவுகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றிருக்கிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நேற்று (23.08.2022) 8:00 மணி முதல் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனையில், கணக்கில் வராத 3.6 லட்சம் ரூபாய் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, மயிலம் சார்பதிவாளர் சங்கீதா உள்ளிட்ட சில அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர் பாலமணிகண்டனிடம் உள்ளிட்டோரிடம் நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், நள்ளிரவைக் கடந்தும் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையில் சுமார் 3.6 லட்சம் ரூபாய் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/HoJqePZ
0 Comments