ஜி.வி பிரகாஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான புரூஸ்லீ எனும் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் கன்னட நடிகை க்ரிதி கர்பண்டா. கன்னடத்தில் பிரபலமான நடிகையான இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ மூலம் பேசியிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கேமரா வைக்கப்பட்டிருந்தது குறித்துப் பகிர்ந்துகொண்டார். அந்த வீடியோவில், ``நான் கன்னட படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது ஒரு ஹோட்டலில் தங்கினேன். அப்போது ஹோட்டலில் வேலைபார்க்கும் ஓர் இளைஞர் டி.வி-யின் செட்-டாப் பாக்ஸ் பின்னால் ஒரு கேமராவை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. ஆனால், சற்று கூர்ந்து கவனித்தாலே அது தெரிந்துவிடும் வகையில்தான் இருந்தது. அதற்குப் பிறகு வேறு எங்கெல்லாம் கேமரா இருக்குமோ என நான் கடுமையாகப் பயந்தேன். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய இடங்களில் இது முக்கியமானது. என்னுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒருவர் என்மீது கைவைக்க முயன்றார். அதைக் கவனித்த நான் அவரை திட்டினேன்.
ஆனால் அவர் எனக்கு அந்த இடம் ரத்தம் கட்டுமளவு கடுமையாகக் கிள்ளிவிட்டு ஓடிவிட்டார். அந்த நிகழ்வுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. நான் மிகவும் அதிர்ச்சியடைந்து திகைத்துப் போனேன். திரைத்துறை சாதாரண பொழுதுபோக்கு தளம் என்பதால், அங்கு பூக்கள் மட்டுமே (நல்ல அனுபவங்கள் மட்டுமே) இருப்பதில்லை. எனவே அனைவரும் கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். க்ரிதி கர்பண்டாவின் இத்தகைய வீடியோ குறித்து, சமூக வலைதளவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/RPrCTFw
0 Comments