மும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... புதுச்சேரி யூடியூபர் கைது!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று ஹரியானா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போன் செய்து தகவல் கொடுத்தார். இது குறித்து மும்பை போலீஸாருக்கு ஹரியானா போலீஸார் தகவல் கொடுத்தனர். மும்பை போலீஸார் மிரட்டல் விடுத்த நபர் எங்கிருந்து பேசியிருக்கிறார் என்பது குறித்து விசாரணை செய்ததில் போன் புதுச்சேரியில் இருந்து வந்திருந்தது தெரிய வந்தது.

மிரட்டல்

உடனே மும்பையில் இருந்து தனிப்படை போலீஸார் புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் காத்திருந்து மிரட்டல் விடுத்த பிரஜாபதி என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் மத்திய பிரதேசமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்து அங்கேயே தங்கிவிட்டது தெரிய வந்தது. புதுச்சேரியில் யூடியூபராக இருந்து வந்தார். அவர் இதற்கு முன்பு எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு வேறு எங்கெல்லாம் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து காயம் அடைந்ததால் மன அழுத்ததில் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதே போன்று மற்றொரு சம்பவத்தில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் மும்பை புறநகர் ரயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தான்.

சித்தரிப்பு படம்

அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரித்த போது அவர் எந்த வித தகவலும் கொடுக்கவில்லை. இதையடுத்து யார் மிரட்டல் விடுத்தது என்பது குறித்து விசாரித்து மும்பை ஜுகு பகுதியை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Latest news https://ift.tt/OToWsAw

Post a Comment

0 Comments