கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் 'பார்பி', கடந்த மாதம் 21-ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியானது. மனித அளவுள்ள பிளாஸ்டிக்கால் ஆன பார்பி பொம்மைகள் கொண்ட பார்பி லேண்ட் ஊரில், பலவிதமான பார்பி பொம்மைகள் வாழ்கின்றன.
இந்த பொம்மைகளுக்குப் பசி, தூக்கம், சோர்வு என எதுவுமே இல்லாமல் பொம்மைகளைப் போலவே இருக்கின்றன. இப்படியான ஊரில் தானும் ஒரு பொம்மையாக வாழும் கதாநாயகிக்கு திடீரென அவரது செல்லில் விரிசல் ஏற்படுகிறது.
இதனால் கதாநாயகி கொஞ்சம் கொஞ்சமாக மனித உருவம் பெருகிறார். தன் மாற்றத்துக்கான விடையைத் தேடி பார்பி லேண்டை விட்டு நிஜ உலகத்துக்கு வரும் கதாநாயகியும் அவரின் காதலரும் சந்திக்கும் பிரச்னைகள்தான் இப்படத்தின் ஒன்லைன்.
இதை ஃபேண்டஸி, காமெடி, பெண்ணியம் என கலந்துகட்டி உருவாக்கியுள்ளார் இயக்குநர் கிரேட்டா. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கிறிஸ்டோபர் நோலனின் 'ஓபன்ஹைமர்' படத்துடன் இணைந்து வெளியானது இந்த பார்பி திரைப்படம்.
ஆனால் 'ஓபன்ஹைமர்' படத்தை பின்னுக்குத் தள்ளி, பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது பார்பி. படம் வெளியாகி 15 நாள்களே ஆன நிலையில், இது உலகளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து வசூலித்துள்ளது.
அதிலும் குறிப்பாக உலக சினிமா வரலாற்றில் பெண் ஒருவர் இயக்கிய திரைப்படம் பில்லியன் டாலர்களை கடந்து வசூலித்துள்ளது இதுவே முதல்முறை. இதன் மூலம் பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த 29-வது இயக்குநராக உருவாகியுள்ளார் கிரேட்டா.
பார்பி திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 459 மில்லியன் டாலர்களையும் வெளிநாட்டு திரையரங்குகளில் 572 மில்லியன் டாலர்களையும் வசூலித்து மொத்தமாக ஆயிரம் பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இந்த வாரம் மட்டும் உலகளவில் பார்பியின் வசூல் 127 மில்லியன் டாலர். பார்பி திரைப்படத்தின் வெற்றி ஹாலிவுட்டில் பெண்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.
from Latest news https://ift.tt/dtcZhso
0 Comments