பஞ்சகவ்யா, மண்புழு உரம், பம்ப்செட் குளியல்; இயற்கை விவசாயத்தை கற்றுக் கொள்ள நேரடி பயிற்சி!

நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய பலர் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து செய்து வருகின்றனர். அதேபோன்று விவசாயத்தில் செலவைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் விவசாயிகள் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இறையழகன் பண்ணை

விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள அனைவரும்  லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில், ``லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!” என்ற தலைப்பில் ஒருநாள் நேரடி களப்பயிற்சி வகுப்பை வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு பசுமை விகடன் நடத்த உள்ளது.

இயற்கை விவசாயத்துக்கு இன்றியமையாத இடுபொருள்களான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி, மண்புழு உரம் ஆகியவற்றை தயாரிப்பதற்கான நேரடி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. வயல்களில் உள்ள பூச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக பூச்சிகளை பற்றி பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம் விளக்கம் அளிக்க இருக்கிறார். இதற்காக வயல்களில் பூச்சிகளை அறியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் வேண்டும் இயற்கை விவசாயம், மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்க உள்ளார் மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில். மரம் வளர்ப்பு பற்றி வகுப்பெடுக்க இருக்கிறார் முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன்.

பம்ப் செட் குளியல், நீச்சல் குளம், டிராக்டர் பயணம் என்று குதூகல பண்ணைச் சுற்றுலாவும் நிகழ்வின் ஓர் அங்கமாக இருக்கும். இயற்கை விவசாயம் பற்றிய அடிப்படையை இந்த நிகழ்வின் மூலம் கற்றுக் கொள்ள வாய்ப்பு. மாணவர்களும், குழந்தைகளும் இதில் பங்கேற்கலாம். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன் பண்ணையில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி அறிவிப்பு

பயிற்சிக் கட்டணம்

நாள்: 27-8-23, ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு.

பெரியவர்களுக்கு ரூ.1,200/- குழந்தைகள், மாணவர்களுக்கு ரூ.500

பயிற்சியில் நோட்பேட், பேனா, காலை சிற்றுண்டி, மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.

நேரடி பயிற்சி அளிப்பவர்கள்...

வழிகாட்டும் வல்லுநர்கள்...

மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில்

பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம்

முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன்

கட்டணம் செலுத்த ஸ்கேன் செய்யவும்

கட்டணம் செலுத்த இந்தக் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவும் (கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பே.டி.எம்). கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள்.. மேலும் கூடுதல் விவரங்களுக்கும் இதே எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.



from Latest news https://ift.tt/tW39Pwh

Post a Comment

0 Comments