பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கனடா குடியுரிமை இருந்தது. இதையடுத்து அக்ஷய் குமார் சம்பாதிக்கும் பணம் முழுக்க கனடாவில் முதலீடு செய்வதாகவும், அவருக்கு இந்தியா மீது பற்று இல்லை என்றும் அடிக்கடி விமர்சனம் எழும். இதையடுத்து அக்ஷய் குமார் தனது கனடா குடியுரிமையை சரண்டர் செய்யும் விதமாக தனது கனடா பாஸ்போர்ட்டை கனடா அரசிடம் ஒப்படைத்து இருந்தார்.
இதையடுத்து அக்ஷய் குமாருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. 77 வது சுதந்திர தினத்தில் தனக்கு இந்திய குடியுரிமை கிடைத்து இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அக்ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்திய குடியுரிமை கிடைத்ததற்கான ஆவணங்களையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதுதான் அக்ஷய் குமார் முதல் முறையாக தனக்கு கனடா குடியுரிமை இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ``எனக்கு எல்லாமே இந்தியாதான். நான் சம்பாதித்தது எல்லாமே இங்குதான். அதனை நான் திரும்ப கொடுக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இது தெரியாமல் சிலர் பேசுகின்றனர். 1990 களில் தான் நடித்த படங்கள் சரியாக போகவில்லை.
இதனால் கனடாவில் இருந்த எனது நண்பர் கனடாவுக்கு வந்துவிடும்படி கேட்டுக்கொண்டார். நானும் கனடா குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தேன். உடனே கிடைத்துவிட்டது. இதனால் கனடாவுக்குச் சென்றேன். கனடாவுக்கு செல்லும்போது எனது இரண்டு படங்கள் வெளியாக இருந்தது. கனடா சென்றவுடன் அந்த படங்கள் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இதனால் இதனால் மீண்டும் இந்தியாவிற்கு சென்று நடிக்கும்படி என் நண்பர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
எனக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. தொடர்ச்சியாக எனக்கு படங்கள் கிடைத்துக்கொண்டிருந்தது. கனடா பாஸ்போர்ட் இருப்பதையே மறந்துவிட்டேன். அந்த பாஸ்போர்ட்டை மாற்றி எடுக்கவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. இப்போது பாஸ்போர்ட்டை மாற்ற விண்ணப்பித்து இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
from Latest news https://ift.tt/5w0kZSG
0 Comments