Scam: சிறுபான்மையினர் நலத்துறையில் 830 போலி நிறுவனங்கள்; ரூ.144 கோடி இழப்பு - விசாரணையில் சிபிஐ

அரசால் வழங்கப்படும் சிறுபான்மையினர் நலத்திட்டங்களில் ஒன்றான உதவித்தொகைத் திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாகச் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த 2017 முதல் 2022 வரை ஸ்காலர்ஷிப் எனும் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுவது குறித்து தேசிய பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி குழு (NCAER) ஆய்வு மேற்கொண்டது.

சிபிஐ

இந்த ஆய்வில் சந்தேகத்திற்குரிய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் என 21 மாநிலங்களைச் சேர்ந்த 1,572 நிறுவனங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இதில் 830 நிறுவனங்கள் செயல்படாதவை அல்லது போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போலியான நிறுவனங்களால் அரசுக்கு ரூ. 144 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது. இதில் பெரும்பாலான மோசடிகள் அரசின் National Scholarship Portal தளத்தின் ஆன்லைன் விண்ணப்பம் மூலம் நடந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, ஐபிசி பிரிவுகளின் கீழ் வங்கிகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் அடையாளம் தெரியாத நபர்கள் மீது குற்றவியல் சதி, ஏமாற்றுதல், மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்திருப்பதாகவும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.



from Latest news https://ift.tt/zAMZU2L

Post a Comment

0 Comments