இன்ஸ்டா மோகம்: ராணுவ வீரர்களின் கல்லறை மீது நடனம்; 2 பெண்களுக்கு சிறை - உக்ரைன் அரசு நடவடிக்கை

உக்ரைன் நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 24-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 32 -வது சுதந்திர தின விழா போருக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தன்று உக்ரைனின் கீவ் நகரில் இருக்கும் கல்லறைக்குச் சென்றிருந்த இரண்டு பெண்கள், அங்கிருந்த ராணுவ வீரர்களின் கல்லறை மீது ஏறி நடனமாடியிருக்கிறார்கள். அந்தக் கல்லறையில் ராணுவ வீரர்களின் புகைப்படமும் இருந்தது.

உக்ரைன் ராணுவ வீரர்கள்

அவர்கள் நடனமாடிய வீடியோவை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து, வீடியோ பலரால் முகம் சுளிக்கும் வகையில் பகிரப்பட்டு வைரலானது. அதைத் தொடர்ந்து, RT.COM மூலம் உக்ரைன் காவல்துறைக்கும் புகார் சென்றிருக்கிறது. இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியும் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், காவல்துறையும், வீடியோவில் இருக்கும் பெண்களின் வீட்டைக் கண்டடைந்து, அவர்களைக் கைது செய்தது.

இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, "இரண்டு பெண்களும் அவர்களின் தந்தையின் கல்லறைக்கு நினைவேந்தலுக்காகத்தான் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்கள். சில நாட்களிலேயே அந்த வீடியோவும் சமூக வலைதளங்களிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளான இரண்டு பெண்களுக்கும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.” என்கிறார்.



from Latest news https://ift.tt/pidPjb7

Post a Comment

0 Comments