டெல்லியில், மர்ம நபர்கள் நான்கு பேர் ஆட்டோவில் வந்தவர்களை வழிமறித்து, துப்பாக்கிமுனையில் ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தச் சம்பவம், வடக்கு டெல்லியின் குலாபி பாக் பகுதியில் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், பணத்தைப் பறிகொடுத்த நபர்களில் ஒருவரான, மோதி நகரைச் சேர்ந்த சுரேஷ் (31) அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்துப் பேசிய காவல் துணை ஆணையர் (வடக்கு டெல்லி) சாகர் சிங் கல்சி, ``கமலேஷ் ஷா என்பவர் கடந்த புதன்கிழமையன்று சாந்தினி சௌக்கில் கொண்டு சேர்க்குமாறு, ஒரு கோடி ரூபாய் பணக்கட்டுகள் நிரம்பிய இரண்டு பைகளை, சுரேஷிடம் ஒப்படைத்திருக்கிறார். அதையடுத்து மதியம் 3:30 மணியளவில், சுரேஷ் பணப் பைகளை எடுத்துக்கொண்டு ராகேஷ் என்பவருடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ மெட்ரோ தூண் எண் 147 வீர் பண்டா பைராகி மார்க் அருகே வந்தபோது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு மர்ம நபர்கள் ஆட்டோவை மடக்கினர். பின்னர், ஆட்டோவில் இருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அவர்களிடமிருந்த பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, பிரதாப் நகர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/iujaPEf
0 Comments