திருப்பத்தூர்: துடிதுடித்து மரணித்த 7 பெண்கள்; ஒரு கிராமத்தையே உலுக்கிய விபத்து - என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர், கடந்த எட்டாம் தேதி 2 வேன்களில், கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவிற்கு சுற்றுலா சென்றனர். இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, நேற்று இரவு ஊர்த் திரும்பினர். இன்று அதிகாலை, பெங்களூரு - சென்னை தேசிய நெடுங்சாலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியை கடக்க முயன்றனர். அப்போது, ஒரு வேனின் டயர் பஞ்சரானது. இதனால், வேன் ஓட்டுநர் சாலையிலேயே வேனை நிறுத்தி பஞ்சர் போட்டுக்கொண்டிருந்தார்.

விபத்து

அந்த சமயத்தில் வேனில் இருந்த பெண்கள் உட்பட பலர், கீழே இறங்கிவந்து, சாலையின் நடுவிலிருக்கும் சென்டர் மீடியன் பகுதியில் அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக இந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சென்டர் மீடியன் பகுதியில் அமர்ந்திருந்தவர்கள்மீதும் ஏறி இறங்கியது. லாரி மோதிய வேகத்தில், நின்றிருந்த வேனின் இடிபாடுகளிலும் சிலர் சிக்கினர்.

இந்த கோர விபத்தில், 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம்கேட்டு, அந்தப் பகுதி மக்களும், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் விரைந்துவந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து

ஒருசிலரின் நிலைமை மோசமாக இருப்பதால், அவர்கள் மட்டும் மேல்சிகிச்சைக்காக வேலூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, அங்குவந்த போலீஸார், உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து, நாட்றம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் பலியான இந்த கோரச் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/6Vd43uI

Post a Comment

0 Comments