விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து கவுகாத்திக்கு இரவு விமானம் ஒன்று புறப்பட்டது. இரவு என்பதால் விமானம் புறப்பட்டவுடன் விளக்கின் வெளிச்சம் குறைக்கப்பட்டது. பக்கத்து பக்கத்து இருக்கையில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த ஆண் பயணி பெண் பயணி உறங்கிய நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பான புகாரின் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது செய்யப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ``நான் சிகிச்சைக்காக மும்பை வந்து, பின்னர் கவுகாத்தி வந்து கொண்டிருந்தேன். நான் அரை உறக்கத்தில் இருந்த போது, என் மீது ஏதோ கை படுவது போல் இருந்தது. உடனே எனக்கு விழிப்பு வந்துவிட்டது. சில நிமிடத்தில் மீண்டும் என் மீது அந்த கை பட்டது. ஆனால் அந்த கையிக்கு சொந்தக்காரர் உறங்குவது போல் கண்ணை மூடி இருந்தார். அதனால் நான் அவசரப்பட்டாமல் பொறுமை காத்தேன்.
சில நிமிடங்களில் மீண்டும் அந்த கை, என் மீது அத்துமீறலாக தொட்டது. உடனே அந்த கையை பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தேன். மின் விளக்கை போட்டு விமான பணியாளரை அழைத்தேன். அந்த நபர் நடந்த காரியத்திற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் நான் அழுது கொண்டே நடந்த சம்பவத்தை தெரிவித்தேன்'' என்றார். பாலியல் தொல்லை கொடுத்த பயணி கவுகாத்தி விமான நிலையத்தில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் போலீஸ் நிலையம் வரை வந்து சாட்சி சொன்னதை பாதிக்கப்பட்ட பெண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். கடந்த 3 மாதத்தில் பெண் பயணிகள் இது போன்று பாலியல் தொல்லைக்கு ஆளாவது 5வது சம்பவமாகும். கடந்த வாரம் மஸ்கட்டில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/LbvjZy2
0 Comments