ஈரோடு: பலத்த மழை... இடிந்து விழுந்த வீட்டின் மொட்டை மாடி - உடல் நசுங்கி தாய், மகன் பலியான சோகம்!

ஈரோடு மாநகர் பி.பி.அக்ரஹாரம் தர்கா வீதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (45). இவரின் மனைவி சராமா (34). இவர்களுக்கு ஒரு மகளும், முகமது அஸ்தக் (13) என்ற மகனும் இருந்தனர். ஜாகிர் உசேன், ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். முகமது அஸ்தக் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஜாகிர் உசேன் தங்கியிருக்கும் வீடு பழைமையான வீடாகும். இந்த வீட்டின் கீழ் தளத்தில் ஜாகிர் உசேன் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். முதல் தளத்தில் வேறொரு குடும்பத்தினர் தங்கியிருக்கின்றனர்.

இடிந்த வீடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன்கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் ஜாகிர் உசேன் வேலை பார்க்கும் பேக்கரியிலேயே தங்கிவிட்டார். சராமா, அவரின் மகன் முகமது அஸ்தக் ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சராமா

சனிக்கிழமை காலை, மொட்டை மாடியின் தளம் இடிந்து, முதல் தளத்தின்மீது விழுந்து, முதல் தளம் இடிந்து தரைத் தளத்தில் விழுந்துள்ளது. அதில், தரைத் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த சாரமா, மற்றும் அவரின் மகன் முகமது அஸ்தக் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். இதையறிந்து அங்கு வந்த கருங்கல்பாளையம் போலீஸார் மற்றும் ஈரோடு தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய், மகனை மீட்க முயற்சி செய்தனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் முதல் தளத்தில் இருந்த தம்பதி உயிர் தப்பினர்.

கார்கள் சேதம்

8 கார்கள் சேதம்:

ஈரோடு மாவட்டம், ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார் மெக்கானிக் குழந்தைவேல். இவர் அதே பகுதியில் பட்டறை வைத்துள்ளார். இங்கு 40-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இவரது பட்டறைக்குப் பின்னால் உள்ள திருமண மண்டபத்தில் 40 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழைகாரணமாக 40 அடி மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில், பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள் சேதமடைந்தன. இரவு நேரம் என்பதால் ஆட்கள் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/umbfkjl

Post a Comment

0 Comments