அண்ணாமலை யாத்திரையில் பாஜக நிர்வாகிகளிடையே மோதல்?- பாதியில் வெளியேறிய மாவட்டத் தலைவர்; பின்னணி என்ன?

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை கோவை வடக்குத் தொகுதியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கணபதி பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய யாத்திரை சங்கனூர் சாலை, கவுண்டம்பாளையம் வழியாக இடையர்பாளையம் பகுதியில் முடிந்தது.

அண்ணாமலை யாத்திரை

யாத்திரையைத் தொடங்கிவைத்து, வானதி சீனிவாசன் மகளிர் நிர்வாகிகளுடன் முன்னே சென்றுவிட்டார். அண்ணாமலை, முருகன் உள்ளிட்டோர் சற்றுப் பின்னால் வந்தனர்.

யாத்திரை தொடங்கிய சிறிது நேரத்திலேயே பா.ஜ.க நிர்வாகிகளிடையே பஞ்சாயத்து ஏற்பட்டது. பா.ஜ.க கோவை மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டே வெளியேறினார். இது குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாலாஜி ஆகியோருக்கிடையே அவ்வபோது மோதல் ஏற்படுவது வழக்கம்.

யாத்திரையில் பாலாஜி உத்தமராமசாமி

நேற்றைய யாத்திரையிலும் முருகானந்தம் தன்னுடைய ஆதரவாளரும், பிரசாரப் பிரிவு அணி மாநிலச் செயலாளருமான வி.என்.ராஜனை அழைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி, ‘அவர் வரக் கூடாது’ என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, பாலாஜி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். தலைவர் அண்ணாமலை, கோவை முன்னாள் மாவட்டத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பாலாஜி, கணபதியிலேயே யாத்திரையிலிருந்து வெளியேறிவிட்டார்” என்றனர். இது குறித்து பா.ஜ.க கோவை மாநகர் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமியிடம் விளக்கம் கேட்டபோது, “அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

பாலாஜி உத்தமராமசாமி

எனக்குச் சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை நடந்தது. நேற்றைய கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால்தான் அங்கிருந்து சென்று மருத்துவரை அணுகினேன். அதன் பிறகு நடக்க முடியாவிட்டாலும் வாகனத்தில் கடைசிவரை பின்தொடர்ந்தேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/2ZXcK50

Post a Comment

0 Comments