`அலோ ஹெல்த் (Allo Health)' என்ற பாலியல் சுகாதார கிளினிக்கல் இந்தியா முழுவதும் சுமார் 530 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 8,625 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 57.32% இந்தியர்கள் தங்கள் பாலியல் கல்விக்காக ஆபாச வீடியோக்களை சார்ந்துள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 65.42% பேர் சமூக ஊடகங்களையும், 59.77% பேர் தங்கள் நண்பர்களையும், 7.93% பேர் தங்கள் பெற்றோர்களையும் சார்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நாட்டில் விரிவான பாலியல் கல்வி இல்லாத நிலையில் இந்தப் புள்ளிவிவரங்கள் கவலையளிப்பதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபாச படங்கள் கல்விக்காக இல்லாமல் எவ்வாறு சுய இன்பத்துக்கு, அல்லது உடலுறவுக்கு உதவியாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டும் செக்ஸுவல் ஹெல்த் எஜுகேட்டர்கள், `பெரும்பாலும் ஆபாச படங்கள் பெண்களை அடிப்பணிந்தவர் களாக சித்திரிக்கின்றன. அதில் சில வீடியோக்கள் பெண்களை துஷ்பிரயோகமாக சித்திரிக்கின்றன. இந்தியா போன்ற ஒரு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தால்தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த எண்ணங்களை உருவாக்கும் பாலியல் வீடியோக்களை பார்ப்பது நம் குடும்பங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்’ என்கின்றனர்.
ஆபாச படங்கள் திட்டமிடப்பட்டது மற்றும் நம்பத்தகாதது. இது பாலியல் கல்விக்கு தீங்கு விளைவிக்கும் ஆதாரமாக உள்ளது. இது பாலியல் உறவுகளைப் பற்றிய தவறான கருத்துகளை மக்களுக்குத் தரலாம். இதற்குத் தீர்வாக ஆபாச படங்களைத் தடை செய்வதைவிட மக்கள், குறிப்பாக இளம் வயதினர் அதைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். ஆபாசப் படங்கள் எவ்வாறு தொழில்துறையாகச் செயல்படுகிறது. அது ஏன் உண்மையற்றது என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து 7.93% பேர் மட்டுமே பாலுறவு பற்றிய அறிவைப் பெறுவது குறித்தும் சர்வேயில் உள்ளது. இது, இந்தியப் பெற்றோர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறுவதைக் குறிக்கிறது.
from Latest news https://ift.tt/mJxgQab
0 Comments