உ.பி: புகாரளிக்க வந்த பட்டியலினப் பெண்; பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ

உத்தரப்பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், புகாரளிக்க வந்த பட்டியலினப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை

இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண், போலீஸில் நேற்று அளித்த புகாரிலுள்ள தகவலின்படி, `செப்டம்பர் 21-ம் தேதியன்று, பட்டியலினப் பெண் சில ஆண்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஜாங்காய் புற காவல் நிலையத்துக்கு புகாரளிக்கச் சென்றிருக்கிறார்.

அன்று பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டே, மாலையில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்களைக் கைதுசெய்ய செல்வதாகக் கூறி புகாரளித்த பெண்ணைத் தனது காரில் ஏற்றிச் சென்றிருக்கிறார். பின்னர், பாண்டே அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையடுத்து, பெண்ணின் புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டே மீது பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 120B (குற்றச் சதி), பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

போலீஸ்

பின்னர், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு, ஹாண்டியா பகுதி உதவி போலீஸ் கமிஷனர் சுதிர் குமாருக்கு, கமிஷனர் ரமித் சர்மா உத்தரவிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உதவி போலீஸ் கமிஷனர் சுதிர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், பாண்டே தலைமறைவாகிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/bVJogXe

Post a Comment

0 Comments