பசுக்கூடங்களைப் பராமரிக்கும் International Society for Krishna Consciousness எனும் ISKCON நிறுவனம், பசுக்களை இறைச்சிக்கு விற்பதாக, பா.ஜ.க எம்.பி மேனகா காந்தி குற்றம்சாட்டியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. `ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துடன் தொடர்புடைய இந்த ISKCON நிறுவனம், உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்களையும், மில்லியன் கணக்கில் பக்தர்களையும் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, இது பற்றிச் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ``ISKCON இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம். பசுக்கூடங்களைப் பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசாங்கத்திடமிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றுவருகிறது. ஆந்திராவின் அனந்த்பூரில் ISKCON நிறுவனம் பராமரித்துவரும் பசுக்கூடத்துக்கு ஒரு முறை சென்றேன். அங்கு, பால் தராத பசுக்கள் மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப்படியென்றால், அவையெல்லாம் விற்கப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.
அதாவது, ISKCON தனது மாடுகளையெல்லாம் இறைச்சிக்கு விற்கிறது. 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' என்று சாலைகளில் அவர்கள் பாடிக்கொண்டே செல்கிறார்கள். தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலைத்தான் நம்பியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்யுமளவுக்கு மாடுகளை யாரும் கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
இருப்பினும், ISKCON நிறுவனம் மேனகா காந்தியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. இது குறித்த அறிக்கையில், ISKCON நிறுவன தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ், ``ISKCON நிறுவனம், இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பசுக்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறது.
விலங்குகள் உரிமை ஆர்வலரும், ISKCON-ன் நலன் விரும்பியுமான மேனகா காந்தியிடமிருந்து இவ்வாறான கருத்துகள் வந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. அவரின், குற்றச்சாட்டுகளின்படி கசாப்புக் கடைகளுக்கு பசுக்களோ, காளைகளோ எதுவும் விற்கப்படவில்லை. மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் உலகின் பல பகுதிகளில் பசுக்களைப் பாதுகாப்பதில் ISKCON முன்னோடியாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
from Latest news https://ift.tt/J9q43Cl
0 Comments