Singapore: இலங்கை பூர்வீகம், தமிழ் வம்சாவளி; 70.4% வாக்குகள் - அதிபராகும் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு முன்னாள் துணை பிரதமரும், பொருளாதார நிபுணருமான தர்மன் சண்முகரத்தம் போட்டியிட்டார். 1959-ம் ஆண்டில் இருந்து நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மக்கள் செயல் கட்சி ஊழல் பிரச்னையில் சிக்கி தவித்தது. அதிபர் பதவிக்கான தேர்தலில் தர்மன் சண்முகரத்தினத்தை எதிர்த்து மேலும் இரண்டு பேர் போட்டியிட்டனர். இத்தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்டன.

இத்தேர்தலில் 66 வயதாகும் தர்மன் சண்முகரத்தினம், 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தேர்தல் அதிகாரி டான் மெங்க் முறைப்படி அறிவித்தார். சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஹலிமா யாக்கோப் அதிபராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 13-ம் தேதியோடு முடிவடைகிறது.

அவருக்கு பதில், இனி தர்மன் சண்முகரத்தினம் அதிபராக இருப்பார். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பாக தர்மன் சண்முகரத்தினம் அளித்த பேட்டியில், ``சிங்கப்பூரில் இது நம்பிக்கை வாக்கெடுப்பு என்று நான் நம்புகிறேன். இது நாம் ஒன்றாக முன்னேறக்கூடிய எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் வாக்கெடுப்பு” என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இது வரை சீனாவை சேர்ந்தவர்களே அதிக அளவில் அதிபர்களாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்துள்ளார். தேர்தல் வெற்றிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், ``சிங்கப்பூர் மக்கள் தனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன்.

தர்மன் சண்முகரத்னம்

எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு சிங்கப்பூரில் செல்லப்பன் ராமநாதன் மற்றும் தேவன் நாயர் ஆகியோர் தமிழர் வம்சாவளி அதிபர்களாக இருந்துள்ளனர். இலங்கைத்தமிழரான தர்மன் சண்முகரத்தினம் லண்டனில் பொருளாதாரம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/yOraJNc

Post a Comment

0 Comments