மகாராஷ்டிரா மாநிலம் வாசிமில் கழற்றி வைக்கப்பட்ட தங்க தாலி செயினை எருமை மாடு ஒன்று சாப்பிட்டு, ஏப்பம் விட்டுவிட்டது. வாசிம் அருகில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த கீதா பாய் என்ற பெண், வழக்கமாக இரவில் உறங்கப்போகும் போது தான் அணிந்திருக்கும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க தாலிச் செயினை கழற்றி வைத்துவிடுவது வழக்கம். வழக்கம் போல் சம்பத்தன்றும் தாலி செயினை கழற்றி அங்கு இருந்த பிளேட் ஒன்றில் வைத்துவிட்டு உறங்கிவிட்டார். காலை எழுந்தவுடன் மாட்டிற்கு சோயாபீன்ஸ் எடுத்து போட்டார். அவர் சோயா பீன்ஸ் எடுக்க தாலி செயினை கழற்றி வைத்த பிளேட்டை பயன்படுத்தினார்.
மாட்டுக்கு சாப்பாடு கொடுத்த சிறிது நேரத்திற்கு பிறகுதான் கழற்றி வைத்த தாலிசெயினை எடுத்து கழுத்தில் போடவேண்டும் என்ற நினைப்பு கீதாபாயிக்கு வந்தது. உடனே செயினை வைத்த இடத்தில் பார்த்த போது காணவில்லை. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. யாராவது திருடி இருப்பார்களோ என்று குடும்பத்தினர் நினைத்தனர். அதன் பிறகு கீதா பாய் தாலி செயினை எங்கு வைத்தோம் என்று தீவிரமாக சிந்தித்து பார்த்த போது, தட்டு ஒன்றில் கழற்றி வைத்தது நினைவுக்கு வந்தது. அந்த தட்டில் மாட்டிற்கு தீவனம் எடுத்து போட்டதையும் குறிப்பிட்டார். உடனே குடும்பத்தினரிடம் தெரிவித்து மாட்டுக்கு தீவனம் வைத்த இடத்தில் தேடிப்பார்த்தனர்.
ஆனாலும் கிடைக்கவில்லை. உடனே கால்நடை மருத்துவரின் துணையோடு மாட்டின் வயிற்றில் செயின் இருக்கிறதா என்று மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்து பார்த்தனர். இதில் மாட்டின் வயிற்றில் தாலி செயின் இருப்பது தெரிய வந்தது. உடனே மாட்டிற்கு டாக்டர்கள் இரண்டு மணி நேரம் ஆபரேசன் செய்தனர். ஆபரேசனில் மாட்டின் வயிற்றில் சோயாபீன்ஸோடு சேர்ந்து தாலி செயினும் இருந்தது. ஆபரேசனுக்கு பிறகு மாட்டுக்கு அறுபத்தி ஐந்து தையல் போடப்பட்டது. தற்போது மாடு குணமடைந்து வருகிறது.
இருந்தாலும் டாக்டர்களின் கண்காணிப்பில் மாடு இருந்து வருகிறது. தாலி செயின் கிடைத்த போதும் வீட்டில் இருந்தவர்கள் கீதாபாயை திட்டித்தீர்த்துவிட்டனர். எப்படியோ மாட்டிற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் செயின் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் கீதா பாய் இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/31pvVwK
0 Comments