உலகக் கோப்பை கிரிக்கெட் - சென்னையில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது!

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடந்தது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய ஆறு இடங்களைக் கண்காணித்தனர். அப்போது சட்டவிரோதமாக கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்றவர்களை போலீஸார் பிடித்தனர்.

கைது

அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுரேன்குமார் (29), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (31), பிரசாத் (20), சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி (32), திருவொற்றியூரைச் சேர்ந்த நசீர் (25), மூலக்கடையைச் சேர்ந்த அபிஷேக் (23), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டபுர்மன் (26), அண்ணாநகரைச் சேர்ந்த லோகேஷ் (21), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் (33), மும்பையைச் சேர்ந்த காட்வின் டிசோசா (34), திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயசூர்யா (23), தாம்பரத்தைச் சேர்ந்த தர்மேந்தர் (27), ஓசூரைச் சேர்ந்த அருள்மூர்த்தி (42) உட்பட 30 பேர்கள் கிரிக்கெட் டிக்கெட்டுகளைக் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. அதனால் அவர்களை போலீஸார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 42 டிக்கெட்டுகளையும் 55,100 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/ZIPUGai

Post a Comment

0 Comments