``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்துவிட்டதால் ஓ.பி.எஸ் பா.ஜ.க-வுடன் கைகோப்பார் எனப் பேசப்படுகிறதே..!”
``மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்புள்ள கட்சியாக பா.ஜ.க இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். மேலும், மத்திய பா.ஜ.க-வும் ஓ.பி.எஸ்-ஸும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறார்கள். எங்கள் தேர்தல் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை தேர்தல் நெருக்கத்தில் நாங்கள் அறிவிப்போம்.”
``கூட்டணி முறிவு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறதே பா.ஜ.க?!”
``பா.ஜ.க பல்வேறு மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, `எங்களுக்கு எடப்பாடியெல்லாம் ஒரு பொருட்டல்ல’ என பா.ஜ.க கருதுவதால் அமைதியாக இருக்கிறது.”
``எடப்பாடி, பா.ஜ.க-வை உதறிவிட்டார் என்பதற்காக, உங்கள் பக்கம் வந்தால், பா.ஜ.க-வும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிதானே?!”
``அரசியல் என்பது சந்தர்ப்பவாதத்தின் மையம்தான். ஆனால், அதிலும் குறைந்தபட்ச நியாய, தர்மம் இருக்க வேண்டும். ஒ.பி.எஸ்-ஸை அழைத்தால் நான் வர மாட்டேன் என்று எடப்பாடி சொல்லியிருக்கலாம். அதனால் அழைக்காமல் விட்டிருக்கலாம். ஓ.பி.எஸ் நம்பிக்கையானவர். முதலில் நம்பிக்கையற்ற எடப்பாடியை உள்ளே அழைத்துக்கொள்ளலாம் என்கிறரீதியில் பா.ஜ.க அந்த முடிவை எடுத்திருக்கலாம். மோடிக்கு வலது பக்கம் எடப்பாடியை உக்காரவைத்தார்கள். இப்போது பின்பக்கமாக ஓடிவிட்டார். எவ்வளவு நன்மைகளை செய்தாலும் எடப்பாடி துரோகம் மட்டுமே செய்வார் என்பதை இப்போது பா.ஜ.க புரிந்திருக்கும்.”
``2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான மூன்றாவது அணியாக உருவாகும் என நம்புகிறீர்களா?”
``எடப்பாடியின் அபகரிப்பு அரசியலையும், தி.மு.க-வின் நிர்வாகத் திறமையற்ற கொடுங்கோல் ஆட்சியையும் எதிர்க்கக்கூடிய சக்திகள் ஓரணியில் திகழ்வார்கள். அதேசமயம் காங்கிரஸை ஏற்கக்கூடியவர்கள் I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதுபோல், பா.ஜ.க-வை ஏற்பவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பார்கள். அப்படி ஓரணியில் திரள்பவர்களை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்கிறதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அதைக் காலம்தான் முடிவுசெய்யும்.”
``அந்தக் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், பா.ம.க போன்ற கட்சிகள் இணைவார்களா?”
``நிச்சயமாக இணைவார்கள். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.”
``அதேசமயம், கூட்டணி முறிவு நாடகம்தான் என்றும் விமர்சிக்கப்படுகிறதே!”
``இதை நாடகமாக நாங்கள் பார்க்கவில்லை. எடப்பாடியோடு பா.ஜ.க நாடகம் நடத்த, எடப்பாடி ஒன்றும் நாடறிந்த தேசியத் தலைவரல்ல. எடப்பாடி ஆதரவு தெரிவித்தால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற அளவுக்கு ஒன்றும் பா.ஜ.க வலுவிழந்த கட்சியுமல்ல.”
``நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மீண்டும் இணையும் என்ற கருத்தும் நிலவுகிறது. அது குறித்து...”
`` கூட்டணியில்லை என அறிவித்துவிட்டு, வேட்டுவைத்துக் கொண்டாடிவிட்டு, `பா.ஜ.க ஒரு வேஸ்ட் லக்கேஜ்’ என்றெல்லாம் விமர்சித்துவிட்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி எனச் சென்றால் மக்கள் கல்லால் அடிப்பார்கள்!”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/z9sGBuY
0 Comments