``தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணி மாற்றங்கள் நடைபெறும்!” - சொல்கிறார் கிருஷ்ணசாமி!

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டியில்  புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அமலில் இருந்த பூரண மதுவிலக்கை நீக்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாற்று பிழை செய்துவிட்டார். இதனால் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது.  மொத்த ஆண்களின் எண்ணிக்கையில்  60 சதவீதம் பேர் மதுபானம் அருந்துகின்றனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கிருஷ்ணசாமி

இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் மது அருந்தும் அவல நிலை  தமிழகத்தில் நிலவுகிறது.  கனிம வளக் கொள்ளையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. வைப்பாற்றில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு ஆளுங்கட்சி பிரதிநிதிகளே துணை போகின்றனர்.  கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க தலைமையில்தான் இருந்தது. 

கடந்த ஜூலை மாதம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க இடையே சிறுசிறு பிரச்னைகள் இருப்பது தொடர்பாகவும்,  அவர்களுக்கிடையே இணக்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் பா.ஜ.கவின்  தேசியத் தலைவர் நட்டாவிடம் வலியுறுத்தியதோடு இது தொடர்பாக கடிதமும் எழுதினேன். கூட்டணியில் ஒரு கட்சி இருப்பதும் வெளியேறுவதும் அந்த கட்சித் தலைமையின் விருப்பம்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் யாரும் எதிர்பாராத கூட்டணி வகையில் மாற்றங்கள் நடைபெறும்.

கிருஷ்ணசாமி

தமிழகத்தைப் பொறுத்தவரை, அதுவும் தென் தமிழகத்தை பொறுத்த வரை 14 முதல் 20 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது. தென் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிப்பட நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் எங்களது கூட்டணி அமையும். முந்தைய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை  தி.மு.க., நிறைவேற்றாததால் மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது.

 தி.மு.க., கடந்த 40 ஆண்டு காலமாக தனது குடும்பத்துக்காகவே பாடுபட்டு வருகிறது.  பேச்சு மட்டுமே  தமிழ், தமிழர் என்று உள்ளது. ஆனால் அவர்களது செயல்பாடுகள் தமிழர்களின் நலனுக்கு எதிராகவே  உள்ளது. அவர்களது நோக்கம் எல்லாமே அரசியல் அதிகாரம் மட்டும்தான்.  கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் காவிரி பிரசனையில் தமிழக முதல்வர் மௌனம் சாதிக்கிறார். அவர் காங்கிரஸை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

கிருஷ்ணசாமி

காவிரி உரிமை பறிபோனாலும் பரவாயில்லை கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நோக்கமாக உள்ளது.  தமிழ்நாட்டின் அனைத்து மணல், குவாரி, ரியல் எஸ்டேட்,  திரைப்படம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது. இதைவிட அப்பட்டமான சர்வாதிகாரம், பயங்கரவாதம் வேறு ஏதும் இருக்க முடியாது. பேசுவது தான் ஜனநாயகம். ஆனால் நடப்பதெல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக உள்ளது.” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/RitvxSY

Post a Comment

0 Comments