தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அன்னை இந்திரா நகர் காலனியைச் சேர்ந்தவர் பிரபு. சமையல் தொழிலாளியான இவர், 2017-ல் வீட்டின் பத்திரத்தைக் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பின்றி இருந்ததால், ஏழு மாதங்கள் தவணை மட்டும் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. இதனால் நிதி நிறுவனம் கூடுதலாக அபராதத்தொகை விதித்திருக்கிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கிடையே பிரச்னை எழுந்திருக்கிறது.
அந்த நிறுவனத்தின் கடன் வசூலிக்கும் ஊழியர்கள், பிரபுவின் டூ வீலரை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டனர். டூ வீலர் திருட்டுபோனதாக நினைத்து பிரபு போலீஸாரிடம் புகார் கொடுத்து, ஒருவழியாக டூ வீலர் மீட்கப்பட்டிருக்கிறது. அப்போதே போலீஸார் முன்னிலையில், நிதி நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய பாக்கி தொடர்பாகப் பேசி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அனைத்துக் கடன்களையும் முறையாகச் செலுத்தியிருக்கிறார் பிரபு.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பிரபுவின் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர், வீட்டின் சுவரில் `வீட்டுக்கடன் கட்டவில்லை' எனப் பெரிதாக எழுதியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அருகேயுள்ள தண்ணீர்க் குழாயை உடைத்து அடிக்க முயன்றிருக்கிறார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, ``இன்னும் 16 மாதங்கள் தவணையாக 1.5 லட்சம் ரூபாய் கடன் தொகை பாக்கி இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கின்றனர். அதிர்ச்சியடைந்த பிரபு, இந்தப் பிரச்னை குறித்து கானா விலக்கு போலீஸாரிடம் புகாரளித்தார். அதனடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய பிரபு, ``ஏற்கெனவே எனது டூ வீலரை எடுத்துச் சென்ற விவகாாரத்தில், போலீஸார் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களைக் கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்தவர்கள், என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கோடு, வீட்டின் சுவரில் அக்கம் பக்கத்தில் என்னை அசிங்கப்படுத்தும்விதமாக `கடன் செலுத்தவில்லை' என எழுதியிருக்கின்றனர். எனவே கடன் வசூலிக்கிறோம் என்ற பெயரில் அராஜகமாக நடந்துகொள்ளும் நிதி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/Gvxd9o7
0 Comments