GRT: இந்த ஆண்டிற்கான 'பிரைடல் ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி' விருது பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

60 ஆண்டுகளுக்கும் மேலான பொன்னான வரலாற்றைக் கொண்டுள்ள GRT ஜூவல்லர்ஸ், தொடர்ந்து தன் படைப்பாற்றல் மற்றும் தரத்தின் வரையரைகளைத் தாண்டி, தென் இந்தியாவில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களின் விருப்பமான இடமாக திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் பயணமானது 1964-ல் அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, நகைத் துறையில் அதன் முத்திரையை பதித்த தற்போதைய நிலை வரை அதன் உற்சாகத்தை, நம்பிக்கையை, தூய்மையை, கைவினைத்திறன் மற்றும் பரிபூரணத்திற்கான இடைவிடாத கலைத்திறன் ஆகியவற்றின் தொகுப்பாகும். இப்போது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் என்னும் மகுடம் மேலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரைடல் ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி விருது

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் சமீபத்தில் நடைபெற்ற மதிப்புமிக்க 'FURA ரீடெய்ல் ஜூவல்லர் இந்தியா விருதுகள் 2023'ல் ஓர் மிக முக்கியமான வெற்றியை கொண்டாடியது. 'வேர்ல்ட் கோல்ட் கவுன்சில்' மற்றும் 'சாலிடர் ஜெம்மோலாஜிக்கல் லேபரட்ரீஸ்' ஆதரவில் 18வது முறையாக நகைத் தொழிலில் மிக உயர் மதிப்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில், உலகம் முழுவதிலுமிருந்தும் பங்கேற்பாளர்களையும், நாமினேஷன்களையும் கொண்டிருந்தது. அதிலிருந்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் "பிரைடல் ஸ்டேட்மென்ட் ஜூவல்லரி ஆஃப் தி இயர்" என்ற விருதை வென்றது. இது தொழில்துறை பிரபலங்கள் முன்னிலையில் கிடைக்கப்பெற்ற, சிறப்பான மற்றும் புதுமைக்கான ஒரு நீடித்த அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.

இதை பற்றி, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள், கூறுகையில், "ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், பாரம்பரியம் மற்றும் நவீன புதுமைகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அங்கீகாரம் பார்பதற்கு பிரமிக்க வைக்கும் நகைகளை வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

"மேலும், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குனர், திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், "இந்த விருது எங்கள் திறமையான கைவினைஞர்களின் அயராத முயற்சியின் ஓர் பிரதிபலிப்பாகும், மணப்பெண்களின் அழகை மேம்படுத்தும் நகைகளை உருவாக்குகிறோம் என்பதை நினைப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்"



from Latest news https://ift.tt/cuBxRS6

Post a Comment

0 Comments