யாசகர் வேடம்: சாக்கு நிறைய ரூபாய் நாணயங்கள்... ஐபோன் 15 வாங்க கடை கடையாகச் சென்ற இவர் யார்?!

சமீபத்தில் வெளியான ஐபோன்15-க்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த போன் கடந்த மாதம் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டபோது அதை மும்பை மற்றும் டெல்லியிலுள்ள ஐபோன் ஷோ ரூம்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் ஜோத்பூரில் யாசகர் போன்று உடையணிந்த ஒருவர் சாக்குமூட்டையில் நாணயங்களைக் கட்டி எடுத்துக்கொண்டு ஐபோன் வாங்கக் கடைகளுக்குச் சென்றார்.

அதிகமான மொபைல் கடை உரிமையாளர்கள் அவரது உடையைப் பார்த்தவுடன், அந்த நபரை உள்ளேவிட மறுத்தனர். சில கடைகள் நாணயங்களை வாங்க முடியாது என்று கூறி அனுப்பின. ஆனாலும் அந்த நபர் ஒவ்வொரு கடையாகச் சென்றதில் ஒரு மொபைல் கடைக்காரர் நாணயங்களை ஏற்றுக்கொள்ளச் சம்மதம் தெரிவித்தார். உடனே கடைக்குள் சென்ற அந்த யாசகர் வேடமணிந்தவர், சாக்குமூட்டையில் இருந்த நாணயங்களை வெளியில் கொட்டினார்.

கடை உரிமையாளருடன் யாசகர் உடையணிந்தவர்

கடையில் இருந்த ஊழியர்கள் அந்த நாணயங்களை எண்ண ஆரம்பித்தனர். எண்ணி முடித்த பிறகு கடைக்கு வந்த நபர் ஐபோன்15 புரோமேக்ஸ் போனை விலைக்கு வாங்கினார். அந்த போனுடன் நின்று கடைக்காரருடன் நின்று யாசகர் உடையணிந்த நபர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவிவருகிறது. அதை 34 மில்லியன் பேர் ஷேர் செய்திருக்கின்றனர்.

இது குறித்து அந்த அந்த நபரிடம் விசாரித்தபோது எக்ஸ்பரிமென்ட் கிங் என்ற இன்ஸ்டாகிராம் சேனல் சார்பாக சோதனை அடிப்படையில் இதைச் செய்து பார்த்ததாகத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/Lk0oeYQ

Post a Comment

0 Comments