IND Vs AUS Practice: '30 நிமிடத்தில் பேடை கழற்றிய விராட்; அஷ்வினின் நகலுடன் மோதிய மேக்ஸ்வெல்!

உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பயிற்சி செஷனின் அப்டேட்கள் இங்கே...
Team Australia

இந்தியா - ஆஸ்திரேலிய இடையேயான இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் மைதானத்தை தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. மைதானம் உலகக்கோப்பை பற்றிய பதாகைகள் வைக்கும் பணிகளும் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது.

Hardik

மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பயிற்சி செஷன் திட்டமிடப்பட்டிருந்தது. முதலில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் என முக்கியமான இந்திய வீரர்கள் பலரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றைக்கு முந்தைய தினம் 45 நிமிடங்களுக்கும் மேல் பேட்டிங் பயிற்சி செய்த விராட் கோலி, நேற்று கிட்டத்தட்ட அரைமணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

Rahul

கே.எல்.ராகுலுக்கு ஒரு பக்கம் பயிற்சியாளர் டிராவிட் வலக்கையில் பந்தை வீச, இன்னொரு பக்கம் இன்னொருவர் இடதுகையில் பந்தை வீசிக் கொண்டிருந்தவர். மாறி மாறி வந்தாலும் ராகுல் ஒரே மாதிரியாக ஃபைன் லெக்கை குறிவைத்த ரேம்ப் ஷாட்களையே ஆடி பயிற்சி செய்து கொண்டிருந்தார். எல்லா வீரர்களும் ஷார்ட் பால்களுக்கு அதிக கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தனர். ஷர்துல் தாகூர் முழுக்க முழுக்க பெரிய ஷாட்களை ஆடி பழகிக் கொண்டிருந்தார். தமிழக வீரர் அஷ்வினும் பேட்டிங் பௌலிங் என இரண்டுவிதமான பயிற்சியையும் செய்தார்.

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சு பயிற்சியையும் எடுத்துவிட்டு தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேல் பேட்டிங் பயிற்சியும் செய்திருந்தார். ஸ்டார்க்கை எதிர்கொள்ளும் வகையில் அத்தனை வீரர்களும் லெஃப்ட் ஆர்ம் த்ரோ டவுணர்களுக்கு எதிராகவும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

பயிற்சி முடிந்து செல்லும்போது மைதான ஊழியர்களை அழைத்து நன்றி கூறிவிட்டு சில நிமிடங்கள் அவர்களிடம் உரையாடிவிட்டு பயிற்சியாளர் டிராவிட் விடைபெற்றார். வழக்கமாக நீல நிற ஜெர்சி அணிந்து பயிற்சி செய்யும் இந்திய வீரர்கள் இப்போது காவி நிறத்தில் ஜெர்சி அணிந்து பயிற்சி செய்ததும் கவனத்தை ஈர்த்திருந்தது.

Dravid

மாலை 5 மணிக்கு மேல் பயிற்சிக்காக வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினர். வார்னர், கம்மின்ஸ், மிட்செல் மார்ஸ் என ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் ஜாலியாக கால்பந்து ஆடியதையும் பார்க்க முடிந்தது.

இந்திய அணியின் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் விதமாக இரண்டு இடதுகை ஸ்பின்னர்கள் மற்றும் அஷ்வினை போன்றே ஆக்சன் உடைய இரண்டு ஸ்பின்னர்களுக்கு எதிராக மேக்ஸ்வெல் பிரத்யேக பயிற்சியை எடுத்தார்.

Maxwell

சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள் போட்டியில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



from Latest news https://ift.tt/9G0jtxV

Post a Comment

0 Comments