`அரிசி பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!’ எந்த நாட்டில் தெரியுமா?

மலேசியாவின் அரிசி தேவையில் ஏறக்குறைய 38 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா போன்ற நாடுகள் பல கட்டுபாடுகளை விதித்துள்ளதால் பிற நாடுகளை நம்பி இருக்கும் மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அங்கு அரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலை உயர்வு ஆகியவை உருவாகியுள்ளன.

அரிசி

அந்நாட்டில் இப்படியே அரிசி தட்டுப்பாடு நிலவினால் வருங்காலத்தில் அரிசி விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது, எனவே சில வியாபாரிகள் அரிசியை அதிகளவுக்கு வாங்கி இப்போதே பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோல் குடும்பத்தினரும் தங்களால் முடிந்த அளவு அதிக அரிசியை வாங்கி சேர்த்துவைத்து வருகின்றனர். அங்கு நிலவும் இந்த பிரச்னையால் எளிய மக்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கூட அரிசி கிடைக்காத நிலை உள்ளது.

“அரிசி கிடைக்க மக்கள் அல்லாடும்போது யாராவது அரிசியைப் பதுக்கினால் நாங்கள் கண்டுபிடித்து வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்று பிரதமர் அன்வர் கூறியுள்ளார். மேலும் அரிசி பதுக்குவோரைக் கண்காணித்து அமலாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார்.

அரிசி

கடந்த மாதம் மலேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் அரிசியின் விலைக்கு அரசாங்கம் வரம்பு விதித்துள்ளது. அதனால் உள்ளூர் அரிசி விலையேற வாய்ப்பில்லை. இந்நிலையில் அரிசி விலை உயர்வைத் தடுப்பதற்காக சாபா, சரவாக் மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் அரிசிக்கு 950 ரிங்கிட் (1 Malaysian Ringgit equals 17.63 Indian Rupee) மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



from Latest news https://ift.tt/sLBzgl7

Post a Comment

0 Comments