" `so' போட்டு பேசாமல் சோறு இறங்காதோ; `But, But' எனப் பேசியே தாய் மொழி பட்டுப்போனது!"- சீமான் ஆதங்கம்

நேற்று மாலை சிதம்பரம் நகருக்கு 'எங்கள் மண், எங்கள் மக்கள்' கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். அவரை தமிழர் மரபோடு செங்கோல் கொடுத்து வரவேற்றனர் சிதம்பரத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள். அந்தக் கட்சியின் சாட்டை துரைமுருகனைத் தொடர்ந்து எட்டு மணி அளவில் பேசத் தொடங்கினார் சீமான். அப்போது பேசிய அவர், `` `எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நிலம்; எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அது வரை உன் இனம்' என்ற வைரமுத்துவின் வாக்கை உணர்ந்து தாய் நிலத்தை காதலியுங்கள். வாழ்நாள் இறுதிவரை தாய் நிலமே நம்மை சுமக்கிறது. வாழ்நாள் முழுவதும் நம்மை சுமக்கும் தாயின் மடி நமக்கு தாய் மண்ணே.

சீமான்

மொழி அழிந்தால் இனம் அழியும், ஆகையால் தமிழில் கையொப்பமிடுவதை வழக்கமாக்குங்கள். `so' போட்டு பேசாமல் சோறு இறங்காதோ... `But, But' என்று பேசியே தாய் மொழி பட்டுப்போனது. நகை விலை உயர்ந்தாலோ கார் கம்பெனிகள் இல்லாமல் போனாலோ புரட்சி வெடிக்காது. ஆனால், நீரும் சோறும் இல்லாமல் போனால் புரட்சி வெடிக்கும். 2021-ம் ஆண்டு தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த தொகுதிகளில் ஒன்று சிதம்பரம். ஆகையால் , அடுத்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் சிப்காட், என்.எல்.சி பரங்கிப்பேட்டை பவர் பிளான்ட் முதலியவற்றை அகற்றுவோம்.

நம்மாழ்வார்

ஆட்சிக்கு வந்தால், நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு நினைவிடமும் அவர் பெயரில் பல்கலைக்கழகமும் உருவாக்குவோம். ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு வேளாண்மை முதலியவற்றை அரசு பணியாக்குவோம். மேலும் வேளாண்மை என்பது நமது தொழில் அல்ல... அது நமது பண்பாடு. படித்தவர்களுக்கு மட்டும் வேளாண்மை அல்ல... உயிருள்ள அனைவருக்குமே வேளாண்மை உரித்தானது. வேளாண்மையின் சிறப்பை உணர்ந்து, பில்கேட்ஸ் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயம் எந்த வகையிலும் குறைந்தது அல்ல. நான் முதலமைச்சரானால் கச்சத்தீவை மீட்டெடுப்பேன்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/Nw1OKIY

Post a Comment

0 Comments