ரூ.80 லட்சம் இன்ஷூரன்ஸ் பணத்துக்கு ஸ்கெட்ச்; யாசகரைக் கொன்று நாடகம் - 17 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

இன்ஷூரன்ஸ் பணத்துக்காக என்னென்னவோ திருட்டு வேலைகளில் ஈடுபடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்க யாசகர் ஒருவரைக் கொலைசெய்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், கௌதம் புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் சிங். இவர் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க முடிவுசெய்தார். இதற்காக தன் தந்தை, சகோதரர் அபய் ஆகியோருடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த நபர் விபத்தில் இறந்தால், காப்பீடு செய்த தொகையைவிட நான்கு மடங்கு பணம் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டனர்.

அதன்படி 20 லட்ச ரூபாய்க்கு அனில் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் எடுத்தனர். அதைத் தொடர்ந்து அனில் விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி, குடும்பத்தினர் மூலம் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கத் திட்டம் தீட்டினார்கள். இதற்காக மூன்று பேரும் அனிலுக்கு பதில் விபத்தில் சாவதற்கு ஆள் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தனர். 2006-ம் ஆண்டு அவர்கள் ஆக்ராவில் சாலையோரம் யாசகர் ஒருவரைப் பார்த்தனர். அவரைத் தங்களின் திட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள மூன்று பேரும் முடிவுசெய்தனர்.

அந்த யாசகரைச் சாப்பாடு வாங்கித்தருவதாகக் கூறி ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மயக்க மருந்து கலந்த சாப்பாட்டைச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கிவிட்டார். உடனே அவரது உடலை கார் ஒன்றின் டிரைவர் இருக்கையில் அமரவைத்து காரை மின் கம்பம் ஒன்றின் மீது தள்ளிவிட்டனர். மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்துக்கொண்டது. கார் விபத்தில் அனில் இறந்துவிட்டார் என்று கூறி அவரின் குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் பணம் 80 லட்சத்தையும் வாங்கிக்கொண்டனர். அந்தப் பணம் கிடைத்ததும் அனில், தன் தந்தை, சகோதரனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு பாக்கிப் பணத்துடன் ராஜ்குமார் என்ற பெயரில் அகமதாபாத்துக்கு வந்து வாழ ஆரம்பித்தார்.

விபத்து

அகமதாபாத்துக்கு வந்த பிறகு தனது சொந்த ஊருக்கு அவர் செல்லவில்லை. அதோடு தன் உறவினர்களுடனும் போனில் பேசவில்லை. சமீபத்தில் அனில் சிங் இன்னும் உயிரோடுதான் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடத்திய விசாரணையில் அனில் சிங் அகமதாபாத்தில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து அனில் சிங் கைதுசெய்யப்பட்டார். அவர் ராஜ்குமார் என்ற பெயரில் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எடுத்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அனைத்தையும் ஒப்புக்கொண்டார். அவரை உத்தரப்பிரதேச போலீஸார் கைதுசெய்து சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/iWwJTqs

Post a Comment

0 Comments