`பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்ற பழமொழியைப் போன்று 2017-ம் ஆண்டு முதல் கூட்டாக ஒன்று சேர்ந்து, கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் விலையுயர்ந்த பொருள்களைத் திருடி வந்த தந்தை, மகன் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
நவி மும்பையின் தலோஜாவில் வசிப்பவர் ஜமீல் முகமது குரேஷி (55), அவருடைய மகன் சாஹில் ஜமில் குரேஷி (27). தந்தை, மகனாகிய இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து, கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் விலையுர்ந்த பொருள்களைத் திருடுவதை வாடிக்கையாகக்கொண்டவர்கள். இதுவரை இவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பல மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் புளூடூத் கார் எல்இடி டிஸ்ப்ளே சிஸ்டம் போன்ற பொருள்களைத் திருடியிருக்கின்றனர். பல்வேறு மாநில காவல்துறையில் இவர்கள்மீது சுமார் 200 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
சூரத்தின் கார்ஜானிலுள்ள நவ் ஜீவன் ஹோட்டலில் கார்களை உடைத்துத் திருடும் கும்பல் தங்கியிருப்பதாக சூரத் குற்றப்பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று, ஹோட்டலில் சோதனை நடத்தி, திருடர்களைக் கைதுசெய்தனர். அவர்கள் திருடிவைத்திருந்த 16 கார் எல்இடி டிஸ்ப்ளே சிஸ்டம், குண்டுடன் இருந்த கைத்துப்பாக்கி போன்றவற்றைக் காவல்துறையினர் கைப்பற்றினார்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூரத் போலீஸ் கமிஷனர் அஜய்குமார் தோவர், ``தந்தை, மகனாகிய இவர்கள் கார்களைக் குறிவைத்து, கண்ணாடிகளை ஸ்க்ரூ டிரைவர்கள்கொண்டு திறந்து, உள்ளேயிருக்கும் விலையுயர்ந்த பொருள்களைத் திருடி, வசதியாக வாழ்ந்துவந்தனர். இவர்கள் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றவர்கள். தற்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதால் குஜராத்தின் சூரத், அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், நவ்சாரி, வல்சாத், மெஹ்சானா போன்ற இடங்களில் பதிவுசெய்யப்பட்ட 75 வழக்குகளில் முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. மேலும் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பிற மாநில போலீஸாருடன் தொடர்புகொண்டு, அங்கு தந்தை-மகன் செய்த குற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/INgabV3
0 Comments