`இந்தக் கேள்வியை இந்தியா கிட்ட கேட்கமாட்டீங்க!' - தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா அதிருப்தி!

உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா, 'இதே கேள்வியை நீங்கள் இந்தியாவிடம் கேட்கமாட்டீர்கள்!' எனப் பேசியிருக்கிறார். பவுமா எதை குறிப்பிட்டு இப்படி பேசினார்?
Bavuma

போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஈடன் கார்டன் மைதானத்தின் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட தெம்பா பவுமாவிடம் ஒரு பத்திரிகையாளர், 'முக்கியமான இந்தப் போட்டியில் சொதப்பாமல் (Choke) இருக்க வேண்டும் என உங்கள் அணியினருடன் ஆலோசனை நடத்தினீர்களா? உங்களின் பேட்டர்கள் அந்த 'Choke' வார்த்தையை அணியின் வரலாற்றிலிருந்து துடைத்தெறிவதில் குறியாக இருக்கிறார்களாமே? என கேட்டார். இதற்குதான் கொஞ்சம் காட்டமாகவே பவுமா பதில் கூறியிருந்தார்.

அவர் பேசியதாவது, 'இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென தெரியவில்லை. ஒருவேளை நாளைய போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படாவிடிலும் அதை 'Choke' என்று சொல்ல முடியாது. எனக்கு ஒரு சந்தேகமும் எழுகிறது.

South Africa
ஒருவேளை இந்தியா நாளை சிறப்பாக செயல்படாவிடில் நீங்கள் அதை 'Choke' என்று குறிப்பிடுவீர்களா என்றே தெரியவில்லை. எங்கள் அணியில் 'Choke' என்ற அந்த வார்த்தையை யாருமே பயன்படுத்துவதில்லை.' என்றார்.

மேலும் பேசியவர், 'இரண்டு சிறந்த அணிகள் ஒரு போட்டியில் மோதும்போது எந்த அணி எதிரணியின் வெற்றிப்பயணத்தை முதலில் முடிவுக்குக் கொண்டு வருகிறது என்பதுதான் முக்கியம். போட்டி நடைபெறும் அன்றைய நாளின் முக்கிய தருணங்களில் பலம் பலவீனங்கள் சரியாக ஆய்ந்து பிரயோகிக்க வேண்டும். உலகக்கோப்பையின் ஒவ்வொரு தருணத்திலுமே அழுத்தம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

South Africa

அதை சிறப்பாக சமாளித்துதான் இந்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம். இனியும் சவால்களும் அழுத்தங்களும் இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஒரு அணியாக அவற்றையெல்லாம் எந்த அளவுக்கு சிறப்பாக கையாள முடியும் என்பதிலேயே எங்கள் கவனம் இருக்கிறது. 'Choke' என்ற வார்த்தையை எங்கள் முகாமில் நான் இதுவரை கேட்கவில்லை.' என்றார். பவுமாவின் கருத்தைப் பற்றிய உங்களின் எண்ணங்களை கமென்ட் செய்யுங்கள்!



from Latest news https://ift.tt/6rYlB0O

Post a Comment

0 Comments