``தொடர் குண்டுமழையை ஏற்றுக்கொள்ளவே முடியாது... உடனே நிறுத்துங்கள்!" - இஸ்ரேல் மீது காட்டமான ஐ.நா

ஹமாஸ் போராளிக்குழு கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 1,400 பேர் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் போராளிக்குழுவை அழிக்காமல் விட மாட்டோம் எனக் கூறி பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலைத் தொடர்ந்துவருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில், ஹமாஸ் போராளிக்குழுவைவிட, பாலஸ்தீனக் குடிமக்களே அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள்.

காஸா அகதிகள் முகாமைத் தாக்கிய இஸ்ரேல்

மேலும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சுற்றிவளைத்த இஸ்ரேல், அந்தப் பகுதிக்கு, குடிதண்ணீர் முதல் மருத்துவ உதவிவரை அனைத்தையும் தடைசெய்திருக்கிறது. இதற்கிடையில், ஐ.நா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. மேலும், ஐ.நா சபையில்,190 நாடுகள் பங்கெடுத்த `உடனடி போர்நிறுத்தத் தீர்மானம்’ 120 நாடுகளின் பெரும் ஆதரவுடன் நிறைவேறியது. ஆனாலும், இஸ்ரேலின் தாக்குதல் நின்றபாடில்லை. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 4,000 குழந்தைகள் உட்பட சுமார் 9,750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஐ.நா-வின் UNICEF, உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு உட்பட 18 அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். அதில், "கிட்டத்தட்ட ஒரு மாதமாக, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் சூழலை, அதிர்ச்சி, திகிலுடன் உலகம் முழுவதும் கவனித்துவருகிறது. பல உயிர்களை பாலஸ்தீனம் இழந்து நிற்கிறது. இஸ்ரேலின் இடைவிடாத வான், பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 9,770 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐ.நா

ஒரு பெரும் மக்கள் கூட்டம் முற்றுகையிடப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருள்களைக்கூட அந்தப் பகுதிக்குள் அனுமதிக்க மறுப்பதும், அவர்களின் வீடுகள், தங்குமிடங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், வழிபாட்டுத்தலங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படுவதைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனே மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும். ஹமாஸ் குழுவும் கைது செய்துவைத்திருக்கும் 240-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

மேலும், சர்வதேசச் சட்டத்தின்கீழ் இரு தரப்பினரும் தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும். முற்றுகையிடப்பட்ட மக்களுக்கு உதவ காஸாவுக்குள் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் எரிபொருள்கள் அனுமதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/YwNO3la

Post a Comment

0 Comments