நாளெல்லாம் ஓடியாடி வேலை பார்த்து காசு சேர்க்குறது எதுக்கு? உழைச்சு களைச்சுப் போனாலும், நிம்மதியா வந்து வீட்டுல ஓய்வெடுக்கற சுகம் வேண்டும் என்பதற்காகத்தானே! வீடுங்குற நினைப்பு வந்துட்டாலே பாதுகாப்பு, நிம்மதி, மகிழ்ச்சின்னு உற்சாகமான மனநிலையும் கூடவே சேர்ந்து வந்திடுதுல்ல. அப்படிப் பாதுகாப்பான, நிம்மதியான வீடு நம்ம சொந்த வீடா இருந்தா, அந்த மகிழ்ச்சி பல மடங்கா அதிகமாகிடும்ல.
இப்படி நீங்க பல நாட்கள் கனவு கண்டு ‘நம்ம வீடு எப்படி இருக்கனும்… அதுல என்னென்னலாம் இருக்கனும்‘னு பிளான் பண்றீங்களோ, அதை அப்படியே தங்களோட கனவா எடுத்துக்கிட்டு வாடிக்கையாளர்களோட கனவு இல்லத்தைக் கவனிச்சு கவனிச்சு உருவாக்கித் தராங்க DAC Developers.
DAC Developers-ன்னா யாரு பாஸ்... அவங்க என்னதான் பண்றாங்க..?
12 வருஷங்களுக்கு முன்னாடி தென்சென்னைய மையமா வச்சு 3 பேரோட ஆரம்பிச்ச ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி தான் இந்த DAC Developers. இப்போ இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல வேலை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், 7000+ மகிழ்ச்சியான வடிக்கையாளர்களைக் கொண்ட நம்பிக்கையான நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை வருஷத்துல தாம்பரம், சித்தாலப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகள்ல 110+ வீடு திட்டங்களைச் சரியான நேரத்துல கட்டி டெலிவரி பண்ணிருக்காங்க. ‘‘எங்களோட முக்கிய இலக்கே, கஸ்டமரோட திருப்தி தான். அதுல மட்டும் எக்காரணம் கொண்டும் சமரசமே இருக்காது’’ என்கிறார்கள் DAC Developers .
இது Engineers ஆரம்பிச்ச கம்பெனி:
‘‘இது ஒரு Engineer-ஆல் தொடங்கப்பட்டு இன்னைக்கு நூற்றுக்கணக்கான Engineer-களால் செயல்படும் நம்பிக்கையான கம்பெனி. எல்லோருக்கும் தரமான வீடு கட்டித்தரனும்ங்கறது தான் எங்களோட கனவு இந்தக் கம்பெனி ஆரம்பிச்சதோட நோக்கமும் அதுதான்’’ என்கிறார் DAC Developers-ன் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ் குமார். இவர் DAC Developers என்ற இந்நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்று வெற்றிகரமாகப் பலநூறு பேர்களின் கனவு இல்லத்தைக் கட்டிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.
3-E என்றால்? தெரிந்துகொள்ளுங்கள்…
DAC Developers ஏன் மக்களுக்கான பில்டர் என்றால் Educate the customer, Engineer Driven Company, Experience centre என்று வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் மூன்று கொள்கைகளை வைத்துச் செயல்படுகிறார்கள்.
உங்க வீடு ஹாட் லொக்கேஷன்ஸ்லதான் இருக்கும்…
ப்ராபர்ட்டியின் விலையைக் கவனத்தில் கொண்டு நகரத்தை விட்டு மிகத் தூரமாகச் சென்று வீட்டை வாங்கி விடுகிறார்கள் பலர். பின்பு, குழந்தைகளின் பள்ளி, தங்களின் வேலை, மருத்துவமனைக்கு என மணிக்கணக்காகப் பயணம் செய்து நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்கிறார்கள். இதனால், குழந்தைகளின் பள்ளிப்படிப்பும் சரி, உடல்நலமும் சரி இரண்டுமே பாதிக்கப்படுகிறது. அதனால், சரியான அடிப்படை வசதிகள் அருகில் இருக்கும் இடமாகத் தேர்வு செய்து வீடு வாங்குவது முக்கியமாகும்.
இதுவரை DAC Developers-ன் ப்ராஜெக்ட்கள் அனைத்துமே 5 நிமிடத்தில் பொடி நடையாய் சென்று சேரும் மெட்ரோ ஸ்டேஷன், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் மற்றும் மால்களின் அருகில்தான் இருக்கின்றன.
பட்ஜெட் முக்கியம் பாஸ்!
ரூ. 50 லட்சத்துலருந்து 2 கோடி வரையிலான வீடுகள்ல சென்னைல பல இடங்கள்ல கட்டிக்கொடுக்குறாங்க. முக்கியமா இந்தப் பட்ஜெட்ல நீங்க விரும்புற அமெனிட்டிஸ் அனைத்தையும் சேர்த்தே கட்டிக்கொடுக்குறாங்க. பட்ஜெட் குறித்து நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார் அவர்கள், “வாழ்க்கை முழுக்கச் சம்பாதிச்ச பணத்தை வீடு வாங்குறதுக்காகப் பயன்படுத்துறாங்க. அதுக்குரிய ரெஸ்பான்சிபிலிட்டிய எடுத்துக்கிட்டு, நமக்குக் குடியிருக்க வீடு கட்டுனா என்னவெல்லாம் கவனிப்போமோ அதையெல்லாம் கவனிச்சு எல்லாருக்கும் கட்டித் தர்றோம்” என்கிறார்.
இதுவரை இவங்க ப்ராஜெக்ட்ஸ்!
இதுவரை DAC 110+ ப்ராஜெக்ட்டுகளைக் கட்டி முடித்திருக்கிறார்கள். 5 வீடு முதல் 180 வீடுகள் வரை பல்வேறு அளவுகளில் அபார்ட்மெண்டுகள் மற்றும் வில்லாக்களை வாடிக்கையாளர்களின் மனநிறைவுகேற்ப கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். மேலும், தற்போது சிட்டியின் முன்னணி இடங்களான நாவலூர், பள்ளிகரணை, மேடவாக்கம், மாடம்பாக்கம், தாம்பரம் போன்ற இடங்களில் வில்லாக்கள் மற்றும் சோழிங்கநல்லூர், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மணப்பாக்கம் போன்ற இடங்களில் அபார்ட்மெண்ட்டுகளைக் கட்டிக்கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாது தற்போது 3 இடங்களில் பெரிய ப்ராஜெக்ட்கள் தொடங்க இருக்கின்றன
ஸ்வீட் ஸ்டாலில் டெமோ பீஸாக லட்டை உடைத்து ருசி பார்த்து வாங்கியிருப்போம். ஆனால் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் என்று இவர்கள் வீட்டையே உடைத்து டெமோ பீஸாகக் காட்டுகிறார்கள். ‘‘இதனாலயே எங்களுக்கு வர்ற வாடிக்கையாளர்கள்ல பாதிப் பேரு ஏற்கனவே நாங்க வீடு கட்டித் தந்தவங்களோட ரெஃபரென்ஸ்ல வர்றவங்கதான். மக்கள் நம்பிக்கையை அந்த அளவுக்குச் சம்பாதிச்சிருக்கோம்’’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார் DAC Developers-ன் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார்.
from Latest news https://ift.tt/OQqX0p4
0 Comments