பீகாரில் தந்தையை கொன்றவரின் மகனை, 19 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்

மதுரை மாவட்டம் எழுமலையில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை ரவி, கருப்பசாமி என்பவர்கள் இணைந்து பொருட்காட்சி நடத்தினார்கள். இவர்களிடம் பணியாற்றிய 25 பேரில் 15 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி நிறைவடைந்த பொருட்காட்சியில் பொருட்களை எடுத்து வைக்கும் பணி நடைபெற்றது.

தீரேஸ்குமார்

இதனிடையே பொருட்காட்சி நடந்த இடத்திற்கு அருகே உள்ள தோட்டத்து கிணற்றில், ஒரு உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சிலர் தெரிவிக்க வி.ஏ.ஓ-வின் புகாரில் எழுமலை காவல்துறையினர் அங்கு வந்து, மீட்பு படையினரின் உதவியோடு அந்த உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

பிணமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டவர் பொருட்காட்சியில் பணியாற்றிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபக்குமார் என்பதும், அவரை கொலை செய்தவர்கள் உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசியிருந்ததும் தெரிய வந்தது.

ராபின்

இது குறித்து போலீஸார் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உயிரிழந்த தீபக்குமாரின் தந்தை பினோத்குமார், கடந்த 2004-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தீரேஸ்குமார் என்பவரின் தந்தை சுவாகா மனோஜ் சிங்கை படுகொலை செய்ததாகவும், அந்த சம்பவம் நடந்தபோது தீரேஸ்குமார் தாயின் வயிற்றில் கருவாகி இருந்ததாகவும், பிறந்த பின்புதான் தந்தை கொலை செய்யப்பட்ட தகவலை தெரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். தந்தையை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சுற்றி வந்த தீரேஸ்குமாருக்கு, தந்தையை கொன்ற பினோத்குமாரின் மகன் தான் தீபக்குமார் என்றும், தன்னுடன் இந்த பொருட்காட்சியில் அவர் வேலை பார்த்து வந்ததும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

அதோடு தீபக்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட தீரேஸ்குமார், தன் நண்பன் ராபின்குமாரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு பொருட்காட்சி நிறைவடைந்த மறுநாளான கடந்த 13-ஆம் தேதி இரவு தீபக்குமாரை மது குடிக்க அழைத்து பின்பு அடித்து கொலை செய்து கல்லைக் கட்டி கிணற்றில் வீசியிருக்கிறார்கள். திரைப்படக்கதை மிஞ்சும் வகையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து, 19 ஆண்டுகள் கழித்து தந்தையை கொலை செய்தவரின் மகனை அடையாளம் கண்டுபிடித்து கொலை செய்த தீரேஸ்குமாரின் வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் ஷாக் ஆகியுள்ளனர்.

பழிக்குப்பழி கொலை

பின்பு தீரேஸ்குமார், ராபின்குமார் ஆகியோரை எழுமலை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/fqFDGiM

Post a Comment

0 Comments