கும்பகோணம் மேயருக்கு எதிராக சாலை மறியல் - போலீஸார், போராட்டக்காரர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு

கும்பகோணம் காங்கிரஸ் கட்சி மேயர் சரவணனுக்கு எதிராக, அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்களை அப்புறபடுத்த முயன்ற போது இன்ஸ்பெக்டர், பெண்களை அடித்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்தியவர்கள்- போலீஸ்

கும்பகோணம், துக்காம்பாளையத் தெருவில், பர்வதராஜ குல சங்கத்தினர், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்திற்கு என தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நடைபெற்ற சங்க தேர்தலில் தலைவராக செல்வராஜ், செயலாளராக ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கும்பகோணம் மேயர் சரவணன் பர்வதராஜ குல சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை செயல்படாமல் தடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக மற்ற நிர்வாகிகளை மிரட்டி வந்ததாக அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் புகார் கூறி வந்தனர்.

போலீஸாருடன் வாக்குவாதம்

இந்நிலையில் மேயர் சரவணன் தரப்பினர், சங்கத்திற்கு எதிராக நோட்டீஸ் அச்சிட்டு துக்காம்பாளைம் பகுதியில் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மடத்துத் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தினார்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று மீண்டும் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மேயர் சரவணனுக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது. போலீஸார் சொன்ன சமாதானங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அழகேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அப்போது அவர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், பெண்கள் சிலரை இன்ஸ்பெக்டர் அழகேசன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து இன்ஸ்பெக்டர் அழகேசனை தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீஸார் ர் இன்ஸ்பெக்டர் அழகேசனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸார் கேட்காமல் மேயர் சொல்வதை கேட்டு செயல்பட்டனர். பெண்கள் என்றும் பாராமல் இன்ஸ்பெக்டர் அவர்களை அடித்தார் .அதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு நியாயம், அடிதட்டு மக்களான எங்களுக்கு ஒரு நியாயமானு கேட்டு வாக்கு வாதம் செய்தோம். சரவணன் மேயராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய செயல்பாடு முற்றிலும் மாறி விட்டது. சங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம்’ என்றனர். தனக்கு எதிரான போராட்டம் தொடர்பாக மேயர் தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/8wYOFQb

Post a Comment

0 Comments