வெள்ள பேரிடர் நிதி: `மத்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொன்றில் சுண்ணாம்பும் தடவுகிறது' - வைகோ!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பி.ராமச்சந்திரபுரத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா. கிருஷ்ணசாமி பெயரில் அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. ஆகியோர் கலந்துக்கொண்டு அறக்கட்டளையை தொடங்கிவைத்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஏழை, எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டது.

வைகோ-ஜி.கே.வாசன்

இதனையடுத்து வைகோ எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ரூ‌.37 ஆயிரம் கோடி உடனடியாக மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக வேண்டும் என தமிழக அரசு கேட்டதற்கு, வெறும் 450 கோடி ரூபாயை மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தமாக மத்திய அரசு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும். மத்திய அரசு ஓரவஞ்சகம் செய்கிறது. பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களில் அதிகமாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் குறைவாகவும் பேரிடர் நிதி அளித்து, ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் பாணியை நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்துக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒருக்காலமும் நடக்காது. அது இந்தியாவை துண்டாடுவதற்குண்டான முயற்சி" என கூறினார்.



from Vikatan Latest news https://ift.tt/pg8QcjO

Post a Comment

0 Comments