கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அந்த மாணவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று, தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த மர்மநபர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி சென்றுவிட்டார்.
உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதனிடையே மாணவரைக் கொலைசெய்த 17 வயதான கல்லூரி மாணவர் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிறகு போலீஸார் அவரை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவர், கொலைசெய்யப்பட்ட மாணவர் படிக்கும் அதே பள்ளியில் படித்தவர்.
கொலைசெய்த மாணவர் 10-வது படிக்கும்போது, அவரின் தங்கையும் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை இறந்த நபர், அவரின் தங்கையை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அண்ணன் என்கிற முறையில் அந்த மாணவரிடம் சென்று கேட்டதற்கு, தன் நண்பர்களுடன் இணைந்து அவரை தாக்கியுள்ளார். தன்னை தாக்கிய 4 பேரையும் பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி ஏற்கெனவே 2022-ம் ஆண்டு தன்னை தாக்கிய 4 பேரில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார்.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளார். இதையடுத்து நேரம் பார்த்து காத்திருந்து மாணவரைக் கொலை செய்துவிட்டார். தன்னை அந்த மாணவர்தான், அதிகம் தாக்கினார் என்பதால், அவரைக் கொலைசெய்ததாக போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
from Vikatan Latest news https://ift.tt/nuzVHUF
0 Comments